ஊழல் குற்றச்சாட்டுப் புகார்களில் சிக்கியவர்களுக்கு கேரள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கக்கூடாது என கேரள காங்கிரஸ் தலைவர் வி.எம்.சுதீரன் சமீபத்தில் பேசியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி, “நான் இதுவரை 4 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளேன். மற்ற அமைச்சர்களை விட என் மீது தான் அதிக அளவில் ஊழல் புகார்கள் உள்ளது. எனவே மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாமல் விலகி இருக்கத் தயார்” என்று தெரிவித்துள்ளார்.
