கிச்சன் கீர்த்தனா : தாய் பேசில் சிக்கன் ஃப்ரை

Published On:

| By Minnambalam

உலகம் முழுக்க விரும்பி ருசிக்கப்படும் அசைவ உணவு சிக்கன். மசாலா, கறி, வறுவல் என வீட்டிலும், விதம்விதமான ஃப்ரைடு உணவுகளாக ஹோட்டல்களிலும் சிக்கனை பலர் சுவைத்திருக்கலாம். அந்த வகையில் மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் வசீகரத்தன்மை வாய்ந்த பல நாடுகளில் புகழ்பெற்ற அசத்தலான சிக்கன் ரெசிப்பிகளை நம் வீட்டிலும் செய்ய இந்த தாய் பேசில் சிக்கன் ஃப்ரை பெஸ்ட் சாய்ஸ்.

என்ன தேவை?
பூண்டு – 5 பல் (பொடியாக நறுக்கவும்)
ஃப்ரெஷ் சிவப்பு மிளகாய் (காயவைக்காதது) – 3
சிக்கன் துண்டுகள் – அரை கப்
ஃபிஷ் சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ் – 2 டீஸ்பூன்
தாய் பேசில் இலைகள் – கைப்பிடி அளவு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

ADVERTISEMENT

எப்படிச் செய்வது?
வாணலியில் எண்ணெய்விட்டு பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் சிவப்பு மிளகாய்த் துண்டுகள், சிக்கன் துண்டுகள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். பிறகு, சோயா சாஸ், ஃபிஷ் சாஸ், உப்பு, பாதியளவு பேசில் இலைகள் சேர்த்து வதக்கவும். சிக்கன் நன்கு வெந்த பிறகு மீதமுள்ள பேசில் இலைகள் சேர்த்துக் கிளறி இறக்கவும். சூடான சாதத்துடன் பரிமாறவும்.

குழந்தைகளுக்கான பசியை அறிந்துகொள்வது எப்படி?

ADVERTISEMENT

கிச்சன் கீர்த்தனா : இட்லி மாவு போண்டா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share