கிச்சன் கீர்த்தனா: மஷ்ரூம் கட்லெட்

Published On:

| By Minnambalam

mushroom cutlet

கிழங்கு வகைகளில் புரதம் மற்றும் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன. ஃப்ரூட் சாலட், வெஜ் சாலட், ஃப்ரெஷ் பழங்களில் அதிக அளவு வைட்டமின்கள் உள்ளன. இவை எல்லாம், நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கக்கூடியவை. இதனால், ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடை கட்டுப்படுகிறது. அந்த வகையில் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த மஷ்ரூம் கட்லெட்டும் உதவும்.  

என்ன தேவை? 

ADVERTISEMENT

மைதா மாவு – 2 டேபிள்ஸ்பூன்  

மஷ்ரூம் – 100 கிராம்  

ADVERTISEMENT

உருளைக்கிழங்கு – 2  

பெரிய வெங்காயம் – 2  

ADVERTISEMENT

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்  

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்  

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்  

மைதா மாவு – 2 டேபிள்ஸ்பூன்  

கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்  

கொத்தமல்லித்தழை – சிறிதளவு  

பிரெட் கிரம்ப்ஸ் – தேவையான அளவு  

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?
உருளைக்கிழங்கை வேகவைத்து மசிக்கவும். மஷ்ரூமைச் சிறியதாகச் சன்னமாக நறுக்கி வைக்கவும். கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டுச் சூடானதும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் பொடியாக நறுக்கிய மஷ்ரூமைச் சேர்த்து லேசாக வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து அடிபிடிக்காமல் பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, தேவையான உப்பு சேர்த்து, ஒரு நிமிடம் கலவை ஒன்று சேரும்வரை புரட்டி அடுப்பை அணைக்கவும். கலவை ஆறியதும் மீடியம் சைஸ் உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் வைத்து வட்டமாக தட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவைச் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்துக் கொள்ளவும். இனி உருட்டிய ஒவ்வொரு பீஸ்களையும் மைதா மாவு கலவையில் முக்கியெடுத்து பிரெட் கிரம்ப்ஸில் புரட்டி வைக்கவும். அடுப்பில் தவாவை வைத்து சூடானதும் எண்ணெய்விட்டு கட்லெட்டை வைத்து இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு: 

தவா நன்கு சூடானதும் கட்லெட்டைச் சேர்த்து தீயை இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

அவல் கிரிஸ்பி

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share