ADVERTISEMENT

ஆவினுக்கு எதிராக செயல்படவில்லை – அமுல்

Published On:

| By Jegadeesh

தமிழ்நாட்டில்‌ ஆவின்‌ நிறுவனத்தின்‌ பால்‌ உற்பத்திப்‌ பகுதிகளில்‌, அமுல்‌ நிறுவனம்‌ பால்‌ கொள்முதல்‌ செய்வதைத்‌ தடுத்து நிறுத்திட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(மே25) கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், ஆவின் நிறுவனத்தை விட அதிக விலைக்கு அமுல் பால் கொள்முதல் செய்வதாக கூறும் தகவல் பொய்யானது என அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இது தொடர்பாக அமுல் நிறுவன ஒப்பந்ததாரர் இன்று(மே25) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் ஒரு கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. 36 லட்சம் லிட்டர் பால் மட்டுமே ஆவின் கொள்முதல் செய்கிறது.

அமுலுக்கு பால் வழங்க வேண்டும் எனில் ஆவினிடமிருந்து என் ஓ சி சான்றிதழ் பெற விதிகள் உள்ளன.

ADVERTISEMENT

ஆவின் நிறுவனம் விவசாயிகளுக்கு நிர்ணயித்த கொள்முதல் விலையே தாங்களும் நிர்ணயித்திருக்கிறோம். ஆவின் நிறுவனத்தை விட அதிக விலைக்கு அமுல் பால் கொள்முதல் செய்வதாக் கூறும் தகவல் முற்றிலும் பொய்யானது.

விவசாயிகளிடம் இருந்து தனியார் நிறுவனங்கள் முறைந்த விலைக்கே பால் கொள்முதல் செய்கின்றன.ஆவின் நிறுவன பால் முகவர்களிடம் அமுல் நிறுவனத்திற்கு பால் வழங்க வேண்டும் என பேச்சு நடத்தவில்லை.

ADVERTISEMENT

கொள்முதல் விலையாக ஆவின் என்ன விலையை நிர்ணயம் செய்துள்ளதோ அதே விலைக்கே நாங்களும் கொள்முதல் செய்துள்ளோம். விவசாயிகளிடம் இருந்து தனியார் நிறுவனங்கள் குறைந்த விலைக்கே பால் கொள்முதல் செய்கின்றன. விவசாயிகளின் பாதிப்பை தடுக்கவே அமுல் செயல்படும், ஆவின் நிறுவனத்திற்கு எதிராக செயல்படாது” என்று கூறப்பட்டுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share