இதெல்லாம் எனக்கு தேவையா? விரக்தியில் நித்யா மேனன்- அழகான காரணம் இருக்கு!

Published On:

| By Kumaresan M

எனக்கு பிடிக்காத துறை திரைத்துறை தான் என்று நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காதலிக்க நேரமில்லை’. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் அண்மையில் நடந்தது. நிகழ்ச்சியில் படத்தின் ஹீரோ ஜெயம் ரவி, ஹீரோயின் நித்யா மேனன் ஆகியோர் பங்கேற்றனர்.

‘காதலிக்க நேரமில்லை’ பட ப்ரமோஷனுக்காக நடிகை நித்யா மேனன் பேட்டியொன்று அளித்துள்ளார். அதில் அவர், “எனக்கு பிடிக்காத துறை சினிமாதான். இப்போதும் கூட வேறு ஏதேனும் துறையில் வாய்ப்பு கிடைத்தால் போய்விடுவேன். ஒரு அமைதியான வாழ்க்கையை வாழவே விரும்புகிறேன்.

எனக்கு டிராவலிங் ரொம்ப பிடிக்கும், அதனால், பைலட்டாக விரும்பினேன். ஒரு நடிகையாக இருந்தால் சுதந்திரத்தை மறந்துவிட வேண்டும். பார்க்கில் போய் நடப்பது ரொம்பவே பிடிக்கும். அதெல்லாம் இப்போது முடியாது. சில சமயங்களில் இதெல்லாம் நமக்கு தேவையா? என்று நினைப்பேன்.

தேசிய விருது கிடைப்பதற்கு முன்பு சத்தமே இல்லாமல் எங்கேயாவது போய்விடலாம் என நினைத்தேன். அப்போது தான் தேசிய விருது கிடைத்தது” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

நாத்தனார் சேட்டை ; ஹன்ஷிகா மீது போலீசில் புகார் அளித்த அண்ணி … பின்னணி என்ன?

திருந்தாத கேரளா: குப்பை கழிவுகளை தமிழ்நாட்டுக் கொண்டு வந்த லாரி பேரை கவனிங்களேன்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share