மாநில உரிமைகள் என்றாலே தமிழ்நாடு என்ற பெருமையை சிதைத்த தவெக அரசு – மு.க.ஸ்டாலின் விளாசல்

By Pandeeswari Gurusamy

|

Published on 9 Nov 2026, 6:06 PM

மத்திய–மாநில உறவுகள், மாநில சுயாட்சி உள்ளிட்ட விவகாரங்களை ஆய்வு செய்வதற்காக முந்தைய திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலைக் குழுவை விஜய் அரசு கலைத்ததற்கு முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “மாநில உரிமைகள் என்றாலே தமிழ்நாடு என்று இந்திய அளவில் நமக்கு இருக்கும் பெருமையை அற்ப அரசியலுக்காகச் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு!

ADVERTISEMENT

இந்தியா முழுவதிலும் இருந்து அறிவார்ந்த ஆன்றோர்கள் தெரிவித்து வரும் கண்டனங்களே த.வெ.க.வின் இழிவான அரசியலை அம்பலப்படுத்திவிட்டன.

நீதியரசர் குரியன் ஜோசப் அவர்களும், அஷோக் வர்தன் ஷெட்டி அவர்களும், பேரா. மு. நாகநாதன் அவர்களும் மேற்கொண்ட பணியில் யாரும் குறைகாணவும் முடியாது, அதனை வேறு எவரைக் கொண்டும் நிறைவு செய்யவும் முடியாது.

ADVERTISEMENT

இத்தகைய சிறப்பான பெருமக்கள் கொண்ட குழுவை அமைத்த பெருமை எனக்கு எப்போதும் இருக்கும், இதனைப் பாதியில் கலைத்த சிறுமைதான் த.வெ.க. அரசின் மேல் காலத்துக்கும் நிலைக்கும்!” என தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel