இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

balebalu
AI வெச்சு புத்தகம் எழுதியதை கூட விட்டுடலாம் ஆனா
த்ரிஷா விஜய் ன்னு ஒரு எழுத்தாளரை உருவாக்கி இருக்கீங்களே அதை மட்டும் …

ArulrajArun
கோவை மக்கள் நவ்;
ஏண்டா வேற எங்கேயும் பெரியார் அறிவுலகம் இல்லையா எங்க ஊர் உங்களுக்கு கிடைச்சதா …

கோழியின் கிறுக்கல்!!
‘மன்னார் அண்ட் கம்பெனி’ என்ற காலத்தால் அழியா காமெடியை,
பெரியார் நூலக புத்தகங்கள் மூலம் கண் முன்னே நிகழ்த்திக் கொண்டிருக்கிறது காலம்!!

படிக்காதவன்
தீபாவளிக்கு ஸ்வீட்ஸ் எதுவும் வாங்கலையா’னு ஒருத்தன்கிட்ட கேட்டேன்
ஆயுதபூஜைக்கு கொடுத்த பொறிக்கல்லையே இன்னும் இருக்குன்னான்
எதுவும் பேசாம வந்துட்டேன்…

Sasikumar J
ஸ்வீட்டா இரு… எந்த ஸ்வீட்டா வேணாலும் இரு..!
ஆனா சோன்பப்படியா மட்டும் இருந்துடாதே…!!

ச ப் பா ணி
மழைக்கு பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்குகிறவர்களை விட
பெட்ரோல் பங்க் பக்கம் ஒதுங்குகிறவர்களே அதிகம்

Sasikumar J
“பாக்ஸ் பாக்ஸா இறங்கிக்கிட்டு இருக்கு மாமா..!”
“என்னது வெடியா..?”
“இல்ல மாமா.. டாஸ்மாக்ல சரக்கு தான்..!”

மெத்த வீட்டான்
நல்லவேளை ஓட்டேரி நரி, பட்டாசு பாலு , பான்பராக் ரவி பெயரில் எல்லாம் பெரியார் நூலகத்துல புக் வைக்கல !
சண்டியர் சரண்யா
என்ன பெரிய எழுத்தாளர் ஜெயமோகன்…
த்ரிஷா விஜய் தெரியுமா…

Bala Vel
போர் விமானம் வாங்குவதில் ஊழல் பண்ணி சம்பாதிக்கும் உங்க உலகம் வேற!
நூலகத்திற்கு வாங்கும் புத்தகத்திலும் ஊழல் பண்ணி சம்பாதிக்கும்
எங்க உலகம் வேற!
லாக் ஆஃப்










