கோவை ‘பெரியார் அறிவுலகம்’: புத்தகத்தின் பெயர்: அதிகாரத்தின் நிழலில்- ஆசிரியர் பெயர்: திரிஷா விஜய்

By Mathi

|

Published on 6 Nov 2026, 5:24 PM

Periyar Arivu Ulagam-New Book

கோவையில் திறக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் ‘பெரியார் அறிவுலகம்’ பிரம்மாண்ட நூலகத்தில் இடம் பெற்றுள்ள ஒரு புத்தகத்தின் பெயர், “அதிகாரத்தின் நிழலில்- இந்தியாவில் துன்புறுத்தலின் அரசியல்’. இந்த புத்தகத்தை எழுதியவர் பெரியவர் திரிஷா விஜய். சமூக வலைதளங்களில் இந்த புத்தகம் அதிகமாக பேசுபொருளாகி இருக்கிறது.

கோவையில் பெரியார் அறிவுலகம் நூலகத்தை அண்மையில் முதல்வர் விஜய் திறந்து வைத்தார். முந்தைய திமுக ஆட்சியில் இந்த நூலகம் கட்டப்பட்டது என்பதால் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு கோவையில் பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில் இந்த பெரியார் அறிவுலகம் நூலகத்தில் இடம் பெற்றுள்ள புத்தகங்கள் என்ற பெயரிலான அபத்த குப்பைகளை பற்றி எழுத்தாளர் பெருமாள் முருகன் அம்பலப்படுத்தினார். நமது மின்னம்பலத்திலும் இதை பதிவு செய்துள்ளோம்.

இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இயக்கத் தலைவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த சர்ச்சையில் மிக கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் புத்தகத்தின் பெயர் “அதிகாரத்தின் நிழலில்- இந்தியாவில் துன்புறுத்தலின் அரசியல்’. தத்துவார்த்தமாக, பின் நவீனத்துவ சிந்தனைவாதிகள் அல்லது இடதுசாரி சிந்தனைவாதிகள் வரிசையில் ஒருவர் இந்த நூலை எழுதியதாக தலைப்பு சொல்லலாம்.. ஆனால் புத்தகத்தை எழுதியவர் பெயர்: திரிஷா விஜய். இதையும் சர்ச்சைக்குரிய அகல் விளக்கு பதிப்பகமே வெளியிட்டுள்ளது.

இந்த நூலின் அட்டைப் படத்தை எழுத்தாளர் பெருமாள் முருகன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பேசுபொருளாகி இருக்கிறது இந்த நூலும் நூலாசிரியர் பெயரும்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel