அன்பில் மகேஷ் மீது புதிய வழக்கு?

By Kavi

|

Published on 6 Nov 2026, 3:56 PM

முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மீது புதிய வழக்கு பதிவு செய்யப்படவிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பொது நூலகங்கள் இயங்கி வருகிறது. இத்துறையின் கீழ் கோவையில், மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த விழிப்புணர்வை வழங்கும் நோக்கில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட பெரியார் அறிவுலகத்துக்கு நூல்கள் வாங்கப்பட்டன.

ADVERTISEMENT

இந்தசூழலில், சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த நூலகத்தில் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமைச்சராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டத்தில், தரமற்ற புத்தகங்கள், சந்தேகத்திற்குரிய பதிப்பகங்கள், அதிக விலைக்கு புத்தகங்கள் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

ADVERTISEMENT

பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றுள்ள புத்தகங்களின் பெயர்களைப் பார்த்தபோது அதிர்ச்சியும் வேதனையும் ஏற்பட்டதாக கூறியுள்ள தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தசூழலில் பெரியார் அறிவுலகம் ஊழல் தொடர்பாக முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது புதிய வழக்குப் பதிவு செய்ய முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை நடந்து வருவதாக தகவல்கள் வருகின்றன.

ADVERTISEMENT

ஏற்கனவே தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி 100 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதன்படி தனக்கு நேற்று ஜாமீன் கிடைத்துவிடும் என்று அன்பில் மகேஷ் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த வழக்கின் உத்தரவை ஊழல் தடுப்பு நீதிமன்றம் நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்துவிட்டது. இந்தசூழலில் அவர் மீது புதிய வழக்கு பதிவு செய்வதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel