முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பான வழக்கில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை கடந்த நவம்பர் 2ம் தேதி முதல் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, கடந்த நவம்பர் 4ம் தேதி மாலை நீதிபதி சத்தியமூர்த்தி முன்பு ஆஜர் படுத்தி மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.
நேற்று சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது.
அப்போது அன்பில் மகேஷ் சார்பிலும் போலீசார் சார்பிலும் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
தொடர்ந்து இந்த வழக்கில் நவம்பர் 10 ஆம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
இந்த நிலையில் அன்பில் மகேஷுக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் சிறையில் இருந்தவாறு காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, அன்பில் மகேஷ் மீதான நீதிமன்ற காவலை நவம்பர் 18ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்










