குதிரை பேர குற்றச்சாட்டு: மதுரை முன்னாள் துணை மேயர் மன்னனிடம் விசாரணை

By Pandeeswari Gurusamy

|

Published on 6 Nov 2026, 9:50 AM

தவெக எம்எல்ஏவிடம் குதிரைபேரம் நடத்திய புகாரில் அதிமுக பிரமுகரும், மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான மன்னனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ. முஸ்தஃபா, சில தினங்களுக்கு முன் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, “சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும்போது, அதை எதிர்த்து வாக்களித்தால் ரூ.30 கோடி வரை தருவதாக அதிமுக தரப்பில் பேரம் பேசினார்கள்” என்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். இதைத் தொடர்ந்து, அமைச்சர் நிர்மல் குமாரும் அதே குற்றச்சாட்டை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், இது குறித்த புகார்கள் காவல்துறைக்குச் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் புகாரின் அடிப்படையில், மதுரையின் அதிமுக பிரமுகரும் மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான பி.எம். மன்னனிடம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக பி.எம். மன்னன், மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளராக நீண்ட காலம் இருந்தார். பின்னர் தேர்தல் நேரத்தில் அதிமுகவில் இணைந்தார். அவர்தான் தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரைப் பேரம் பேசியதாகத் தகவல்கள் கசிந்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருவது அதிமுக தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel