போதைப் பொருள் பயன்பாடு Fun & Enjoyment-இல் சேர்ந்துவிட்டதா? – முதல்வர் விஜய்க்கு வலுக்கும் கண்டனங்கள்

By Pandeeswari Gurusamy

|

Published on 6 Nov 2026, 1:59 PM

Vijay

தமிழகத்தின் முதல்வரான விஜய், சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற தவெக கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். அந்த விழாவில் பேசிய முதல்வர் விஜய் ஊழல் பக்கம் போயிடாதீங்க… கொஞ்சம் ஃபன், என்ஜாய்மெண்ட் ஓகே… பட் போதை போன்ற பொருட்களுக்கு அடிமையாகாதீங்க” என பேசினார்.

இதுகுறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பதிவில், “தவெக அரசின் கையாலாகாத்தனத்தை மறைக்க மாணவர்களுக்கு இலவச உபதேசமா விஜய் அவர்களே

ADVERTISEMENT

சென்னையில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் விஜய் போதைப்பொருள், ஊழல் பக்கம் போயிடாதீங்க… கொஞ்சம் ஃபன், என்ஜாய்மெண்ட் ஓகே… பட் அடிமையாகாதீங்க’ என கேஷுவலாகப் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தின் முதல்வர் என்கிற பொறுப்பான பதவியில் இருந்துகொண்டு மாணவர்களிடம் இப்படியா பேசுவது? ஒருவர் தனிப்பட்ட முறையில் பேசுவதென்பது வேறு, ஒரு பொறுப்பான முதல்வர் பேசுவதென்பது வேறு. திரு. ஜோசப் விஜய் அவர்கள் இது போன்ற ஒரு அறிவுரையை தனது வாரிசுகளுக்கு வழங்குவாரா? இது சினிமா ஷூட்டிங்கோ அல்லது ஆடியோ லான்ச் மேடையோ அல்ல திரு. ஜோசப் விஜய் அவர்களே; ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலம்!

காவல்துறையை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு போதை மாஃபியாக்களையும், ஊழல் திமிங்கலங்களையும் சிறையில் தள்ள வேண்டிய நீங்கள், மேடைகளில் அமர்ந்து ‘மோட்டிவேஷன் ஸ்பீக்கர்’ போலப் பஞ்ச் டயலாக் பேசுவது உங்கள் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது. ‘தவறுக்கு அடிமையாகாதீர்கள்’ என்று குழந்தைகளுக்கு உபதேசம் செய்வது மட்டும் முதல்வரின் வேலை கிடையாது; இளைஞர்களைச் சீரழிக்கும் போதைக் கும்பலை வேரோடு அழிப்பது உங்கள் பிரதானக் கடமை.

ADVERTISEMENT

Gen Z இளைஞர்களிடம் ‘Cool CM’ எனப் பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக, போதைப்பொருள் ஒழிப்பு போன்ற தீவிரமான விவகாரத்தைக்கூட ‘Vibe & Chill’ மனப்பான்மையோடு அணுகுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உங்கள் பி.ஆர் (PR) விளம்பரங்களுக்காகத் தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்வைப் பணயம் வைக்காதீர்கள். துணிச்சலிருந்தால் போதை மாஃபியாக்கள் மீது குண்டர் சட்டத்தைப் பாய்ச்சுங்கள்! இல்லையெனில், உங்கள் போலியான ‘Vibe’ அரசியலைத் தூக்கியெறிந்து, உங்களை ஆட்சிக் கட்டிலிலிருந்து இறக்க இந்த Gen Z தலைமுறையே முன்னிற்கும் என எச்சரிக்கிறேன்!” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பதிவில்,”இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்து வரும் போதைப் பொருள் பயன்பாடு Fun & Enjoyment-இல் சேர்ந்துவிட்டதா? – மாணவ, மாணவியர்கள் மத்தியில் போதைப் பொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பது போல பேசி , அதனை Normalize செய்ய முயல்வது தான் முதலமைச்சரின் வேலையா?

ADVERTISEMENT

10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்குகிறோம் என்ற பெயரில் அவர்களை அழைத்து, அவர்கள் மத்தியில், “லஞ்சம் ஊழல் அந்த சைடு எல்லாம் போய்டாதீங்க, இந்த போதைப் பொருள் அந்த சைடு எல்லாம் போய்டாதீங்க ஒரு Fun & Enjoyment இருக்கும் ஆனா எந்த தவறுக்கும்அடிமையாயிடாதீங்க ” என முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஏற்கனவே காற்றில் கலந்த விஷத்தைப் போலத் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பரவி, குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தையே சிதைத்துக் கொண்டிருக்கும் போதைப் பொருட்களை, கொண்டாட்டப் பட்டியலில் (Fun & Enjoyment) சேர்த்து, அளவுடன் பயன்படுத்துங்கள் என்பது போல ஊக்குவிப்பதும், அவற்றின் பயன்பாட்டை Normalize செய்ய முயல்வதும் முதலமைச்சருக்கும் அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல.

சமீபத்தில், 100 கிலோவுக்கும் அதிகமான மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) எனும் கொடிய போதைப்பொருளைப் பதுக்கி வைத்திருந்த தவெக நிர்வாகியை மத்திய அரசின் விசாரணை அமைப்பு கைது செய்துள்ள நிலையில், தற்போது போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலான முதலமைச்சரின் பேச்சைப் பார்க்கும்போது, பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.

திரைப்படங்களின் மூலம் மது அருந்துதல், புகைப்பிடித்தல், போதைப் பொருட்களைப் பயன்படுத்துதல், அதை விற்பனை செய்வது போன்ற சமூகச் சீர்கேடுகளை ஊக்குவிக்கும் வகையிலான கதாபாத்திரங்களில் நடித்தது போதாதென்று, தற்போது மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவிலும் இத்தகைய செயல்பாடுகளை Normalize செய்து பேசுவது, முதலமைச்சரே இளைஞர்களையும் மாணவர்களையும் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறாரோ என்ற அச்சத்தை ஏற்படுத்துவதோடு, முதலமைச்சரே சொல்லிவிட்டார் என்பதற்காகச் சிறிதளவு போதைப் பொருட்களைப் பயன்படுத்தலாமே என்ற மனநிலைக்கு மாணவர்களும் இளைஞர்களும் சென்றுவிட்டால், அவர்களது எதிர்காலத்தைப் பாதுகாப்பது யார்? அதற்கான சமூகப் பொறுப்பை ஏற்பது யார்? என்ற கேள்வியும் எழுகிறது.

எதற்கெடுத்தாலும் தன்னைப் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் ஒப்பிட்டுப் பேசிக்கொள்ளும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், புரட்சித்தலைவர் தான் நடித்த திரைப்படங்களில் மது அருந்துதல், புகைபிடித்தல் உள்ளிட்ட எந்தவொரு சமூகச் சீர்கேட்டையும் ஊக்குவிக்கும் வகையிலான காட்சிகளில் நடிக்காமல், தனது திரைப்படங்கள் மக்களுக்கு நன்னடத்தையையும் , சமூக விழிப்புணர்வையும் எடுத்துரைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் அதனால் தான் அவர் மக்களால் அன்போடு ‘வாத்தியார்’ என்று அழைக்கப்படுகிறார் என்பதை எண்ணிப்பார்த்து இனியாவது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசுவதை நிறுத்திக்கொள்வதோடு தான் அத்தகைய ஒப்பீட்டுக்குத் துளியும் தகுதியோ அருகதையோ இல்லாதவர் என்பதை உணர வேண்டும்!

தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களுக்கான அடிப்படைக் காரணிகளில் ஒன்றாக இருக்கும் போதைப் பொருட்களின் புழக்கத்த்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய முதலமைச்சர் ஜோசப் விஜய், ஒரு துளி விஷம் என்றாலும் அது விஷம் தான் என்பதை உணராமல் போதைப் பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பது அபத்தமானது.

எனவே, மாணவர்களுக்கு விருது வழங்கும் மேடையில், அவர்களை நல்வழிப்படுத்துவதற்கான விதைகளை விதைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமே தவிர, விஷத்தை விதைத்து அவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கக் கூடாது என்பதை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு இந்நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.”என தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel