வைதீக முறை திருமணம்… வருத்தம் தெரிவித்த துரைமுருகன்

By Kavi

|

Published on 6 Nov 2026, 8:17 PM

தனது பேத்தி திருமணத்தை வைதீக முறைப்படி நடத்தியது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். 

திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றான சுயமரியாதைத் திருமணத்தை திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ADVERTISEMENT

ஆனால் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேத்தி திருமணம் வைதீக முறைப்படி நடைபெற்றது. 

இதற்கு திமுகவில் இருந்தே கண்டன குரல்கள் எழுந்தன. 

ADVERTISEMENT

இந்தநிலையில் தனது பேத்தி திருமணத்தை வைதீக முறைப்படி நடத்தியதற்கு துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார். 

இன்று (நவம்பர் 6) அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,  ”எனது பேத்தி திருமணம் குறித்து சில விளக்கங்களை கழகத் தோழர்களுக்கும், மற்றவர்களுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புவது யாதெனில்; கலைஞரின் அடியொற்றி, நீண்ட அரசியல் பயணம் மேற்கொண்டு வரும் எனது திருமணம், கலைஞர் தலைமையில் நடைபெற்றது. அதைப்போலவே, நான் முன்னின்று நடத்திய என் மகன் திருமணம் கலைஞர் தலைமையில் திருமணம் நடைபெற்றது என்பதை நாடே அறியும். 

ADVERTISEMENT

அயல்நாட்டில் கல்வி பயின்ற எனது பேத்தி, தான் வேற்று சாதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வருவதாவும் – அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் – வைதீக முறைப்படியே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் என்னிடம் தெரிவித்தார். அவரது விருப்பத்தின்படியே வைதீக முறையில் எனது பேத்தியின் திருமணம் நடைபெற்றது. 

எனது பேத்தியின் வற்புறுத்தலின் பேரில்தான், இவ்வைதீக முறை திருமணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுவிட்டது. நடைபெற்ற இந்நிகழ்வுக்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இதனை அரசியலாக்கவோ அல்லது விவாதப் பொருளாக்கவோ யாரும் முன்வர வேண்டாம்” என கேட்டுக் கொண்டுள்ளார். 

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel