தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசின் உள்துறை இன்று வெளியிட்டுள்ள உத்தரவில், நான்கு காவல் துறை உயர் அதிகாரிகள் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஹரி கிரண் பிரசாத் ஐபிஎஸ் ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளராகவும்,
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்டீஸ், சென்னை பெருநகர காவல் தெற்கு மண்டல போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராகவும்,

சென்னை பெருநகர தெற்கு மண்டல போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் முத்துக்குமார், ஆவடி காவல் ஆணையரகம் போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராகவும்,
ஆவடி போக்குவரத்து துணை ஆணையர் ஈஸ்வரன், தாம்பரம் காவல் ஆணையரகம் பள்ளிக்கரணை மண்டல காவல்துறை ஆணையராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.










