பெரியார் அறிவுலக நூல்கள் வாங்குவதில் கூட ஊழல் நடந்திருக்கிறதா என மக்கள் பேசும் அளவிற்கு நிலை இருக்கிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவையில் அண்மையில் தமிழக முதல்வர் விஜய் திறந்து வைத்த பெரியார் அறிவுலக நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் குறித்து எழுத்தாளர் பெருமாள் முருகன் கட்டுரை ஒன்றை எழுதி உள்ள நிலையில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று இரவு (நவம்பர் 6) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ” கோவையில் பெரியார் நூலகத்தை முதல்வர் வந்து திறந்து வைத்தார். இன்று அந்த துறையின் அமைச்சர் பெரியார் நூலகத்தில் புத்தகங்கள் வாங்குவதில் பல்வேறு தவறுகள் நடைபெற்று இருக்கிறது ஊழல் நடந்துள்ளது என சொல்லி இருக்கிறார்.
பெரியார் வழியில் வந்தவர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் பெரியார் நூலகத்தில் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பது உண்மையில் பெரும் வேதனையை தருகின்றது. இது போன்ற தவறுகளை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. பதிப்பகம் இல்லாத நூலகங்களில் இருக்கின்ற புத்தகங்கள் இருக்கின்றது என்ற நிலையை அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். அதில் எத்தனை பக்கங்கள் இருக்கிறது, அதற்கு என்ன விலை என்பதையும் குறிப்பிட்டு காட்டப்பட்டு இருக்கிறது.
பெரியாரின் புனித பெயரைச் சொல்லிக் கொண்டு பெரியார் நூலகத்தில் இப்படி நடைபெறுவது உண்மையில் வேதனை அளிக்கிறது. இது போன்ற நிகழ்வுகளை தமிழக மக்கள் கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதிலும் கூட ஊழல் நடந்து இருக்கிறதா என மக்கள் பேசும் அளவிற்கு இருக்கிறது” என தெரிவித்தார்.










