போதும் இத்தோட நிறுத்திக்கலாம்: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு ஆபிஸ் வர்ற வழியில நண்பன் ஒருத்தன் கூட போன்ல பேசிக்கிட்டு இருந்தேன்.

“என்னடா… தனுஷூக்கும் நயன்தாரவுக்கும் ஏதோ பஞ்சாயத்து போலயேன்னு” கேட்டேன்.

“ஆமா… மாப்ள இப்பதான் இன்ஸ்டா ஒப்பன் பண்ணி பார்த்தேன். ரத்த களறியாவுல்ல இருக்குதுன்னு” சொன்னான்.

“வீக் எண்டுக்கு செம்ம கன்டென்ட் சிக்கியிருக்கு. ஆனா இதுல ஹைலைட் என்னன்னா இந்த கலவரத்துல கங்குவா தப்பிச்சிருச்சுன்னு” சொன்னேன்.

“அத ஆல்ரெடி முடிச்சிவிட்டாங்க… இனி ரெண்டு நாள் கழிச்சு மறுபடியும் அடிப்பாங்க. லெட்ஸ் வெயிட் அன்ட் சின்னு” சொல்லிட்டு போன வச்சிட்டான்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

balebalu
எதுக்குடா சிரிக்குற ?
அவங்கவங்க கல்யாண கேசட்டையே யாரும் முழுசா பாக்குறதில்ல
இதுல மத்தவங்க கல்யாணத்தை விரும்பி பார்ப்பாங்க ன்னு
25 கோடி கொடுத்து Netflix வாங்கி இருக்கானே
அதை நினைச்சேன் சிரிச்சேன்…

Sasikumar J
வீட்ல தான் ஒரே சத்தமா இருக்கு அப்படின்னு தியேட்டருக்கு போனா அங்க அதைவிட சத்தமா இருக்கு…!

ச ப் பா ணி
“சிறு பொய்களால் மட்டுமே மனைவியைச் சமாளிக்க முடிவது உறுத்தலாக உள்ளது குருவே என்றான் சீடன்.
மனைவிகள் எதிர்பார்ப்பது உண்மைகளையல்ல; பொருத்தமான பதில்களை மட்டுமே என்றார் ஜென்குரு

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
இன்போசிஸ் நாராயணமூர்த்தி சொன்ன மாதிரி வாரத்துக்கு 100 மணி நேரம் உழைப்பை போட்டும் கடன் தொல்லை தான் புரோ நாளுக்கு நாள் அதிகமாயிட்டு இருக்கு..
அப்படி எங்க உழைக்கறீங்க புரோ..?
ஆன்லைன் ரம்மி விளையாட்டுல புரோ..

balebalu
“என்ன சத்தம் இந்த நேரம் …”
என்னடா பாட்டு எல்லாம் பலமா இருக்கு ?
கங்குவா பார்த்துட்டு வந்தேன் அண்ணே

mohanram.ko
அர்ஜூன் சம்பத் டூ கஸ்தூரி – ரிலீஸ் ஆகி வந்ததும், என் மீட்டிங்ல தான் முதல்ல பேசணும்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
நம்ம இங்க தனுஷா நயன்தாராவான்னு சண்டை போட்டுட்டு இருக்கோம்.. ஆனா இது எல்லாமே ஏன் Netflix டாக்குமென்டரியை விளம்பரப்படுத்தறதுக்கான யுத்தியா இருக்க கூடாது..?

சரவணன். ????
~ ஏன் எல்லாரும் காதை மூடிக்கிட்டு இருக்காங்க.. அணு குண்டு ஏதும் வெடிக்கறாங்களா?
~கங்குவா படம் ஓடிக்கிட்டு இருக்காம்..

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

Exclusive : குழந்தையுடன் இருந்த நடிகை கஸ்தூரி கைது!

மோடிக்கு மெமரி லாஸ் : ராகுல் தாக்கு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share