தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி இன்று கைது செய்யப்பட்டார்.
பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் கடந்த நவம்பர் 3ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் பங்கேற்று பேசிய நடிகை கஸ்தூரி, “மன்னர்களின் அந்தப்புரத்து மகளிருக்கு சேவை செய்தவர்கள்தான் தெலுங்கர்கள். எப்போதோ இங்கு வந்த அய்யர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? ” என்று பேசியிருந்தார்.
அவரது பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்த நிலையில், சென்னை, திருச்சி, மதுரை, தேனி உள்ளிட்ட பல பகுதிகளில் காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
எழும்பூர் காவல் நிலைத்தில் இந்திய தெலுங்கு சம்மேளனம் அளித்த புகாரின் அடிப்படையில் இரு பிரிவினர் இடையே கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தலைமறைவான கஸ்தூரி முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நடிகை கஸ்தூரியின் பேச்சு வெடிகுண்டு போல் உள்ளது என அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் ஹைதராபாத்தில் வைத்து இன்று கைது செய்தனர்.
இதுதொடர்பாக எழும்பூர் போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது,
“நடிகை கஸ்தூரியை பிடிக்க சென்னை, தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் டாக்டர் கண்ணன் ஐபிஎஸ் மூன்று தனிப்படை அமைத்திருந்தார். அதில் ஒரு தனிப்படை எழும்பூர் காவல் ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையில் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் போலீசார் கஸ்தூரிக்கு நெருக்கமான சிலரை கண்காணித்தனர். இதில் ஹைதராபாத்தில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிலருக்கு செல்போன் அழைப்புகள் வருவதும் போவதும் இருந்ததோடு, திடீரென ஹைதராபாத்தில் இருக்கும் அந்த செல்போன் எண் ஆப் செய்வதுமாக இருந்தது.
இதை ஆராய்ந்த கூடுதல் ஆணையர் கண்ணன் டீம் அந்த செல்போன் தொடர்புகளை கண்காணித்ததில் கஸ்தூரி தெலங்கானா திரையுலகில் உள்ள ஒருவருடன் பேசி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த நபரின் தொடர்புகள் மூலமாக கஸ்தூரி இருக்கும் இடத்தை போலீசார் உறுதி செய்தனர். இந்தநிலையில் ஹைதராபாத் சென்ற போலீசார் கஸ்தூரி தங்கியிருந்த வீட்டை கண்டறிந்தனர். அந்த தகவலை இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் கூடுதல் ஆணையருக்கு தெரிவித்தார்.
அப்போது, கஸ்தூரியை கவனமாகவும் சுமூகமாகவும் பேசி அழைத்து வாருங்கள். அவருடன் பேசுவது முதல் கைது செய்து காரில் ஏற்றுவது வரையில் அனைத்தையும் முழுமையாக வீடியோ பதிவு செய்யுங்கள் என்று ஆணையர் கண்ணன் அறிவுரை வழங்கினார்.
அதன் பேரில் மோகன்ராஜ் டீமில் சென்ற பெண் போலீசார் இன்று (நவம்பர் 16) இரவு சுமார் 8 மணியளவில் கஸ்தூரி தங்கியிருந்த வீட்டின் கதவை தட்டினர்.
போலீஸ் தான் கதவை தட்டுகிறார் என்று எதிர்பார்க்காத கஸ்தூரி, கதவை திறந்ததும் அதிர்ச்சியானார். அவரிடம் போலீசார் நாங்கள் சென்னை போலீஸ் என்று அறிமுகம் செய்துகொண்டதும், ‘எனக்கு உடல்நிலை சரியில்லை. நிறைய மாத்திரைகளை எடுத்துகொண்டு வருகிறேன்.
என்னுடன் குழந்தை இருக்கிறது. குழந்தையை கவனித்துக்கொள்ள வேண்டும். குழந்தையை எங்கே விட்டுவிட்டு வரமுடியும்.. அதனால் என்னால் இப்போது வரமுடியாது. நானே நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறேன். ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க… என்று போலீசாரிடம் கெஞ்சி அழுதிருக்கிறார்.
அப்போது உங்களுக்கு திருமணமாகவில்லை. இந்த குழந்தை யாருடையது என்று போலீசார் கேட்க… எதுவும் சொல்லாமல் மவுனமாக வந்து போலீஸ் வாகனத்தில் ஏறி அமர்ந்தார் கஸ்தூரி” என்றனர்.
கஸ்தூரியை கைது செய்த காவல்துறையினர், தற்போது அவர் வைத்திருந்த குழந்தை யார் என்று தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இக்குழந்தை கஸ்தூரியின் உறவினரின் குழந்தையா? அல்லது போலீசிடம் அனுதாபத்தை ஏற்படுத்த அவருக்கு தெரிந்தவரிடம் இருந்து பெறப்பட்ட குழந்தையா? உள்ளிட்ட கோணத்தில் விசாரித்து வருகிறது கூடுதல் ஆணையர் கண்ணன் டீம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
மோடிக்கு மெமரி லாஸ் : ராகுல் தாக்கு!
200 சீட் – ஸ்டாலின் ஆசையை அதிமுக நிறைவேற்றும் : தங்கமணி
Comments are closed.