மாப்பிள்ளை சம்பா மால்ட், முருங்கை துளசி சூப் : வீட்டிலேயே செய்யக்கூடிய பாரம்பரியச் சத்து பானங்கள்!

By Minnambalam Desk

|

Published on 17 Nov 2026, 6:23 PM

பாரம்பரிய உணவுகளுக்கும் சிறுதானியங்களுக்கும் இப்போது மறுபடி மவுசு கூடிவருகிறது. உடம்புக்குத் தேவையான சத்துகளை இயற்கை உணவுகளிலிருந்தே பெற நினைப்பவர்கள், பாரம்பரிய அரிசி வகைகளையும் கீரைகளையும் தினசரி உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். மாப்பிள்ளை சம்பா அரிசி, கருப்பு உளுந்து, முருங்கைக்கீரை, மணத்தக்காளி போன்றவற்றை வைத்துச் சில ஆரோக்கிய பானங்களையும் சூப்பையும் வீட்டிலேயே செய்யலாம்.

1. மாப்பிள்ளை சம்பா மால்ட்

ADVERTISEMENT

பாரம்பரிய உணவுகளில் மாப்பிள்ளை சம்பாவுக்குத் தனி இடம் உண்டு. தேவையானவை:

  • மாப்பிள்ளை சம்பா அரிசி – 1 கப்
  • கருப்பு உளுந்து – 1 கப்
  • ஏலக்காய் – 4
  • கருப்பட்டி அல்லது கரும்புச் சர்க்கரை – தேவையான அளவு

அரிசி, உளுந்து இரண்டையும் கழுவி உலர்த்தி, ஏலக்காயோடு சேர்த்து வறுங்கள். கருப்பட்டியையும் லேசாகச் சூடாக்கிக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் ஆறவிட்டு, பொடியாக அரையுங்கள். இந்தப் பொடியைச் சூடான பாலில் கலந்து குடிக்கலாம்.

ADVERTISEMENT

2. காய்கறிப் பருப்பு சூப்

பாசிப்பருப்பு, கேரட், பீன்ஸ், கீரை, தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி எல்லாம் சேர்த்துச் செய்யும் இந்தச் சூப், சுவையோடு புரதத்தையும் நார்ச்சத்தையும் தரும்.

ADVERTISEMENT

முதலில் நெய்யில் இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை வதக்குங்கள். அதில் காய்கறிகள், பருப்பைச் சேருங்கள். மஞ்சள் தூள், மிளகு, சீரகம், உப்புப் போட்டுத் தண்ணீர் ஊற்றி வேகவைத்தால் சூப் ரெடி.

3. முருங்கைக்கீரை – துளசி சூப்

ஒரு கப் முருங்கைக்கீரை, கால் கப் துளசி, கொஞ்சம் புதினா, ஒரு தக்காளி, நான்கு பூண்டுப் பற்கள், மிளகு, சீரகம் எல்லாவற்றையும் சேர்த்து வேகவையுங்கள். பிறகு அரைத்து வடிகட்டி, மறுபடி கொதிக்க வைத்து, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறுங்கள். கீரைகளில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் உடலின் சத்துத் தேவைக்கு உதவும்.

4. மணத்தக்காளி – பாதாம் சூப்

தேவையானவை: ஒரு கப் மணத்தக்காளிக் கீரை, எட்டுப் பாதாம், ஐந்து சின்ன வெங்காயம், நான்கு பூண்டுப் பற்கள், மிளகு, சீரகம், ஒரு தேக்கரண்டி நெய்.

ஊறவைத்த பாதாமின் தோலை உரித்துவிடுங்கள். மற்ற பொருட்களோடு கீரையையும் வதக்கி வேகவையுங்கள். பிறகு பாதாமையும் சேர்த்து அரைத்து, மறுபடி கொதிக்கவிட்டு உப்புச் சேருங்கள். விருப்பம் இருந்தால் கொஞ்சம் பால் ஊற்றிக்கொள்ளலாம்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel