தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
மதுரை தெற்கு வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

இங்கே சிட்டிங் எம்.எல்.ஏ. மதிமுகவின் பொடா பூமிநாதன்.. மறுபடியும் மதிமுக வேட்பாளரா உதயசூரியன் சின்னத்தில போட்டியிடுறாரு பூமிநாதன்.
பூமிநாதனுக்கு எதிராக அதிமுக கூட்டணியில ராம சீனிவாசன் போட்டி போடுறாரு.
இந்த தொகுதியில இறங்குவதற்காக தொடர்ச்சியாக எலக்ஷன் வேலைகளை செஞ்சவர் ராம சீனிவாசன்.
லோக்சபா எலக்ஷன்ல பாஜக வேட்பாளராக போட்டியிட்டு இதே மதுரை தெற்கில சுமார் 42,000 வாக்குகளை வாங்கியிருந்தாரு.
நமது சர்வே முடிவுபடி,
திமுக கூட்டணி- 38%
அதிமுக கூட்டணி-41%
தவெக-12%
நாதக- 8% வாக்குகள் பெறும்
அதிமுக கூட்டணி வேட்பாளர் ராமசீனிவாசன் கொஞ்சம் லீடிங்கில் இருக்கிறார்.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
