பழைய ஹிட் படத்தின் டைட்டிலில் நடிக்கும் ஜெயம் ரவி: இயக்குனர் இவரா?

Published On:

| By Monisha

kiruthiga udhayanidhi directing jayam ravi

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு நடிகர் ஜெயம் ரவி, இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ’பிரதர்’, ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ’சைரன்’, மோகன் ராஜா இயக்கத்தில் ’தனி ஒருவன் 2’, மணி ரத்னம் இயக்கத்தில் ’தக் லைஃப்’, என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

மேலும் ஜெயம் ரவியின் 33 வது படத்தை இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்க உள்ளார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் ’JR 33’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

கிருத்திகா உதயநிதி இயக்கும் JR 33 படத்திற்கு ’காதலிக்க நேரமில்லை’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கின்றார். ஏ.ஆர். ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. தற்போது “காதலிக்க நேரமில்லை” படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

கூடிய விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

– கார்த்திக் ராஜா

அமீர் குறித்த விமர்சனம்: வருத்தம் தெரிவித்த ஞானவேல் ராஜா

10 வருடத்தை யார் திரும்பிக் கொடுப்பார்கள்? செல்வகணபதி தீர்ப்பு எழுப்பும் விவாதங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share