டியூட் படத்தில் மீண்டும் ‘கருத்த மச்சான்’ பாடல்!

Published On:

| By Kavi

டியூட் திரைப்படத்தில் மீண்டும் கருத்த மச்சான் பாடல் இடம் பெறவுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த “கருத்த மச்சான்” மற்றும் “100 வருஷம்” ஆகிய பாடல்களை, அவரது அனுமதி இல்லாமல் “டியூட்” திரைப்படத்தில் பயன்படுத்தியதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

ADVERTISEMENT

இந்த வழக்கில் இளையராஜாவுக்கு சாதகமாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதாவது டியூட் பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், உடனடியாக இந்த பாடல்களை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 3) மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

அப்போது, டியூட் பட விவகாரத்தில் இளையராஜாவுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டது என்றும் டைட்டில் கார்டில் நன்றி தெரிவிக்கப்படும் எனவும் மைத்திரி மூவி மேக்கர் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் பதிலளித்தது.

தொடர்ந்து இரு தரப்பினரும் சமரசத்திற்கு ஒப்புக்கொண்டதால், வழக்கை முடித்து வைத்து நீதிபதி என்.செந்தில் குமார் உத்தரவு பிறப்பித்தார்.

ADVERTISEMENT

அதன்படி மீண்டும் டியூட் படத்தில் கருத்த மச்சான், 100 வருஷம் பாடம் இடம்பெறவுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share