கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: உத்திரட்டாதி!

Published On:

| By Kavi

purattasi month uthirattathi nakshatra palan 2024

-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

குரோதி வருட கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்: 16.11.2024 முதல் 15. 12.2024 வரை

உத்திரட்டாதி

பொறுமைக்கும் பொறுப்பு உணர்வுக்கும் ஏற்ப பெருமை அதிகரிக்கும் காலகட்டம். பிறர் குறையைப் பெரிதுபடுத்தாமல் இருந்தால் உங்கள் உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும். அலுவலகத்தில் பதவி, பாராட்டுகள் நிச்சயம் வரும்.

உயரதிகாரிகளிடம் வீண் ரோஷம் வேண்டாம். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். பணி சார்ந்த பயணங்களில் கோப்புகள் பத்திரம். உடன் வரும் யாரிடமும் ரகசியம் பகிரவேண்டாம்.

இல்லத்தில் சுமுகமான சூழல் நிலவும். உறவுகளால் நன்மைகள் சேரும். விலகி இருந்த உறவும் நட்பும் மீண்டும் வரும். வாரிசுகள் வாழ்க்கையில் சுபகாரியங்கள் நடக்கும். தரல் பெறல் எதையும் உடனுக்குடன் குறித்துவையுங்கள். பெண்களுக்கு குடும்பத்தில் செல்வாக்கு உயரும்.

தொழில் எதுவானாலும் தொய்வு இல்லாத முயற்சிகள் முக்கியம். ஏற்றுமதி இறக்குமதியில் நேரடி கவனம் அவசியம். அரசியல் துறையில் உள்ளவர்கள், பொது இடங்களில் நிதானத்தைக் கடைபிடியுங்கள். மேலிடத்தின் ஆதரவு கிட்டும்.

அரசுப்பணியில் இருப்பவர்கள் எதிர்பார்த்த மேன்மைகள் கூடிவரும். உடனிருப்போர் தவறுகளை பெரிதுபடுத்த வேண்டாம். சினிமா, கலைத்துறை, இசைத்துறையினர் உழைப்புக்கு ஏற்ற உயர்வைப் பெறுவீர்கள். திட்டமிடல் மேன்மை தரும்.

மாணவர்கள் சோம்பலை விரட்டுவது முக்கியம். வாகனத்தில் கவனச்சிதறல் கூடாது. கழிவு உறுப்புகள், ரத்த நாளம், நரம்பு, அடிவயிறு உபாதைகள் வரலாம். நந்தி வழிபாடு நன்மைகள் சேர்க்கும்.

அதிர்ஷ்டம் உங்கள் பிறந்த தேதிகளில் | கார்த்திகை மாதம் எண் கணித பலன்கள் |  | Astrologer Shelvi

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள் : பூசம்!

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம்!

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள் : திருவாதிரை!

கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்: மிருகசீரிஷம்!

கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள் : ரோகிணி!

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள் (16.11.2024 – 15. 12.2024) : கிருத்திகை!

கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள் (16.11.2024 -15. 12.2024): பரணி!

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (16.11.2024 முதல் 15. 12.2024 வரை)

40 முறை சிறை சென்றவர்… யார் இந்த மைக் டைசன்?

‘இந்தியா இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபி நடத்த முடியாது’ : பாகிஸ்தானிடத்தில் ஐசிசி உறுதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share