-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
குரோதி வருட கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: 16.11.2024 முதல் 15. 12.2024 வரை
மிருகசீரிஷம்
நல்லவை அதிகரிக்கும் காலகட்டம். இந்த சமயத்தில் நேரம் தவறாமையும்நேரடி கவனமும் அனைத்திலும் முக்கியம். பணி செய்யும் இடத்தில் வீண் ஜம்பம் யாரிடமும் வேண்டாம்.
பொறுப்புகளை தட்டிக்கழிப்பது கூடவே கூடாது. எதிர்பாராத இடமாற்றம் வரலாம். அதை வீண் ரோஷம் இல்லாமல் ஏற்பதே நல்லது. சிலருக்கு புதிய பணி வாய்ப்பு அமையும்.
குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். குதர்க்கமும் குத்தல் பேச்சும் தவிர்ப்பது நல்லது. வாரிசுகளால் பெருமை உண்டாகும். பூர்வீக சொத்து லாபம் தரும். அசையும் அசையா சொத்து சேரும். அக்கம் பக்கத்தில் அதீத நெருக்கம் வேண்டாம்.
செய்யும் தொழிலில் வளர்ச்சிக்கு இடம் உண்டு. முயற்சிகளை முட்டுக்கட்டை போடவேண்டாம். புதிய ஒப்பந்தங்களை கவனமாகப் படித்து பிறகு கையெழுத்திடுங்கள்.
அரசியலில் உள்ளவர்களுக்கு ஆதரவு நிலைக்கும். அனுபவம் மிக்கவர்களிடம் வீண் உரசல் வேண்டாம். அரசுப்பணி செய்பவர்கள் ஆதாயம் அதிகரிக்கப் பெறுவீர்கள்.
கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு வாய்ப்புகள் நிச்சயம் வரும். சிறிய வாய்ப்பானாலும் தவிர்க்காமல் செய்யுங்கள். மாணவர்களுக்கு மதிப்பெண் உயரும். வாகனத்தில் வித்தைகாட்டல் கூடாது. எலும்பு, மூட்டு, கால்சியம் குறைபாடு உபாதைகள் வரலாம். மகாலக்ஷ்மி வழிபாடு மகிழ்ச்சி சேர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (16.11.2024 முதல் 15. 12.2024 வரை)
கீர்த்தி சுரேஷ் கல்யாணம் கட்டும் ஆண்டனி தாட்டில் யார்?
டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்.. பூந்தமல்லி யார்டில் சோதனை ஓட்டம்!
அறப்போர் இயக்கம் மீது மானநஷ்ட வழக்கு… உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி ஆஜர்!