கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள் (16.11.2024 -15. 12.2024): பரணி!

-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

குரோதி வருட கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்: 16.11.2024 முதல் 15. 12.2024 வரை

பரணி

நல்லவை நடக்கும் காலகட்டம். அதேசமயம் எதிலும் திட்டமிடலும் நேரடி கவனமும் முக்கியம். பணி செய்யும் இடத்தில் உங்களுக்கு உரிய உயர்வுகள் கிட்டும். எந்தப் பணியையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்யுங்கள். உங்கள் பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். கோப்புகளில் கவனம் முக்கியம்.

குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். சுபகாரியங்கள் கைகூடும். பெரியவர்கள் உடல்நலம் சீராகும். அசையும், அசையாப் பொருட்கள் சேரும். யாருக்கும் வீண் ஜவாப், ஜாமீன் தரவேண்டாம்.

செய்யும் தொழிலில் லாபம் சீராக வரும். வர்த்தகம் சார்ந்த அரசு அனுமதிகளில் அலட்சியம் கூடாது. பங்குவர்த்தக முதலீட்டை தள்ளிப்போடுங்கள்.

அரசியலில் இருப்போர், உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும். மேலிடத்திடம் தர்க்கம் வேண்டாம். அரசுப்பணி செய்பவர்கள் எதிர்பாராத இடமாற்றம் வந்தால் தவிர்க்க வேண்டாம்.

மாணவர்கள் சோம்பல் தவிர்ப்பது அவசியம். கலைஞர்கள், படைப்பாளிகள் மேன்மை பெறுவீர்கள். பயணத்தில் நிதானம் முக்கியம். தலைவலி, கண்கள், அடிவயிறு உபாதைவரலாம்.சிவன் வழிபாடு, சீரான நன்மை தரும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்.. பூந்தமல்லி யார்டில் சோதனை ஓட்டம்!

அறப்போர் இயக்கம் மீது மானநஷ்ட வழக்கு… உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி ஆஜர்!

ஹெல்த் டிப்ஸ்: எடையைக் குறைக்க விரும்புபவர்களே… உங்களுக்கான ஆலோசனைகள் இதோ!

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? அரசு பஸ்களில் முன்பதிவு தொடங்கிருச்சு!

பியூட்டி டிப்ஸ்: கருந்திட்டுகள் காணாமல் போக!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts