‘இந்தியா இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபி நடத்த முடியாது’ : பாகிஸ்தானிடத்தில் ஐசிசி உறுதி!

Published On:

| By Kumaresan M

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தானுக்கு வராது என்று ஐ.சி.சி. உறுதிபட தெரிவித்து விட்டது.

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்க இந்தியா மறுத்து விட்டது. இதையடுத்து, ஐ.சி.சி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் ஹைபிரிட் மாடலில் போட்டியை நடத்த முடிவு செய்து அறிவுறுத்தி வருகிறது.

இதனால், இந்தியா மோதும் போட்டிகள் துபாய் போன்ற பொது  இடத்தில் நடைபெறலாம். மேலும், இந்தியாவுக்கு எதிராக எந்த அறிக்கையும் விட வேண்டாமென்றும் பாகிஸ்தானுக்கு ஐ.சி.சி. அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நக்வி கூறுகையில், ‘விளையாட்டையும் அரசியலையும் தொடர்பு படுத்தாமல் இருப்பதே நல்லது. ஐசிசி அமைப்பு இந்தியா பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி வர மறுப்பதாக சொல்கிறது. விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம். இந்த தொடரில் விளையாட தகுதி பெற்ற அனைத்து அணிகளும் பாகிஸ்தான் வர தயாராக உள்ளன. இந்தியாவை தவிர.

எந்த அணியும் ஆட்சேபனை தெரிவிக்காத நிலையில் இந்தியா மட்டுமே வர மறுக்கிறது. எனினும், இப்போதும் பாசிடிவான முடிவுக்காக காத்திருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பிறகு, மத்திய அரசு இந்திய விளையாட்டு அணிகளை பாகிஸ்தானுக்கு அனுப்புவதில்லை. இரு நாடுகளுக்கிடையே கிரிக்கெட் தொடரும் நடப்பதில்லை.

ஐசிசி நடத்தும் தொடர்கள் இந்தியாவில் நடந்தால், பாகிஸ்தான் அணி வேண்டுமானால் இங்கு வந்து விளையாடிக் கொள்ளலாம். இந்த முடிவில் மத்திய அரசு உறுதியாக இருப்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தவிக்கிறது. இந்த விஷயத்தை அரசியல்ரீதியாகவும் பாகிஸ்தானால் அணுக முடியவில்லை.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள் (16.11.2024 -15. 12.2024): பரணி!

‘அமரன் ‘ முகுந்தின் கடைசி 15 நிமிடங்கள்… உண்மையை சொன்ன நண்பர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share