கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்: ஹஸ்தம்!

Published On:

| By Kavi

-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

குரோதி வருட கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்: 16.11.2024 முதல் 15. 12.2024 வரை

ஹஸ்தம்

தன்னம்பிக்கையோடு செயல்படுவோர்க்கு உயர்வுகள் உருவாகும் காலகட்டம்.

அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். அதைப் புலம்பாமல் ஏற்பதே நல்லது.

திட்டமிட்டு நேரடி கவனத்துடன் செய்தால் உயர்வுகள் நிச்சயம் கைகூடும். குறுக்குவழி யோசனை எதையும் ஏற்க வேண்டாம்.

பணத்தைக் கையாள்வதில் கவனச்சிதறல் கூடாது.

வீட்டில் விட்டுக் கொடுத்தல் முக்கியம்.

எதிர்பால் நட்பில் எல்லை மீற வேண்டாம்.

வாரிசுகளால் பெருமை சேரும். சுபகாரியங்களில் ஆடம்பரம் தவிருங்கள். பழைய கடன்களை நேரடியாகப் பைசல் செய்யுங்கள்.

செய்யும் தொழிலில் லாபம் சீராகும். தெரியாத தொழிலில் முதலீட்டை முடக்க வேண்டாம். அரசுப்பணியினருக்கு மேன்மைகள் உருவாகும்.

அரசியலில் உள்ளவர்கள் அடக்கத்தைக் கையாள்வது அவசியம். யாருக்கும் ஜாமீன் தரவேண்டாம். கலைஞர்கள், சினிமா, அரசியல், படைப்புத் துறையினர் வாய்ப்புகள் தேடி வரும்போது வீண் கர்வம் கொள்ளவேண்டாம்.

பெண்களுக்கு உறவுகளிடையே செல்வாக்கு உயரும்.

மாணவர்கள் ஆசிரியர்கள் வழிகாட்டலை அவசியம் கேளுங்கள்.

பயணத்தில் கொண்டு செல்லும் பொருட்கள் பத்திரம்.

அடிவயிறு, கழிவு உறுப்பு, அஜீரண சங்கடங்கள் வரலாம்.

நரசிம்மர் வழிபாடு நலம் சேர்க்கும்.

அதிர்ஷ்டம் உங்கள் பிறந்த தேதிகளில் | கார்த்திகை மாதம் எண் கணித பலன்கள் |  | Astrologer Shelvi

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள் (16.11.2024 -15. 12.2024): பரணி!

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (16.11.2024 முதல் 15. 12.2024 வரை)

‘அமரன் ‘ முகுந்தின் கடைசி 15 நிமிடங்கள்… உண்மையை சொன்ன நண்பர்!

பாடகர் டி.எம் கிருஷ்ணாவுக்கு எம்.எஸ் சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க தடை!

இந்திக்கு மாறிய எல்.ஐ.சி வலைத்தளம்… இந்தியர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் : ஸ்டாலின் கண்டனம்!

எங்கு பார்த்தாலும் லஞ்சம்! – டெல்லி கிரிக்கெட் சங்கம் இப்படியா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share