‘அமரன் ‘ முகுந்தின் கடைசி 15 நிமிடங்கள்… உண்மையை சொன்ன நண்பர்!

Published On:

| By Kumaresan M

கடந்த 2014 ஆம் ஆண்டு காஷ்மீரில் நடந்த காசிபத்ரி ஆபரேஷனில் மேஜர் முகுந்த் எப்படிக் கொல்லப்பட்டார். தற்போது, அவரது வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான அமரன் படம் செம ஹிட் அடித்துள்ளது.  மேஜர் முகுந்த் குண்டடிபட்ட போது, நடந்தது என்ன? என்பது பற்றி ராணுவ வீரரும் அவரது நண்பருமான ஏழுமலை பல விஷயங்களை கூறியுள்ளார்.

ஒரு யூடியூப் சேனலுக்கு ஏழுமலை அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளதாவது,  “கடந்த 2012 முதல் 2014 ஆம் ஆண்டு வரை காஷ்மீரில் உள்ள ஷோபியான் பகுதியில் 44 ஆர்ஆர் ரெஜிமென்ட் படைப் பிரிவில் இருந்தேன். அங்குதான் நான் முதன்முதலாக முகுந்த் சாரை சந்தித்தேன். அவர் அதிகம் யாரிடமும் பழக மாட்டார். குறைந்தது 2 மாதங்களுக்குப் பிறகுதான் நாங்கள் இருவரும் சேர்ந்து பழக ஆரம்பித்தோம்.

ஏப்ரல் 24 ஆம் தேதி  அல்தாப் பாபா ஆபரேஷன் தொடங்கப் போகிறோம் என திடீரென்றுதான் சொன்னார்கள். குடியிருப்புக்குள் பதுங்கியிருந்த எதிரிகளை சுற்றி வளைத்தோம்.  எதிரிகள்  சுடத் தொடங்கினார்கள். நாங்களும் குண்டுகளை வீசினோம். நான் தான் தாக்குதல் நடக்கும் பகுதிக்கு அருகிலிருந்தேன்.  மாலை 5:30 மணி இருக்கும். தொடர்ந்து, எதிரிகள் குண்டு வீச விக்ரம் மீதும் குண்டு பாய்ந்தது. அடுத்து முகுந்த் சுடத் தொடங்கினார்.

அதில் தீவிரவாதி ஆசிப் உள்ளிட்டோர் உயிரிழந்தனர்.  அப்போது,  முகுந்த் மீதும் குண்டு பாய்ந்து அவர் காயமடைந்து கீழே விழுந்தார். முதலில் குண்டடிபட்டதை முகுந்த் உணரவில்லை. தரையில் சரிந்து விழுந்த பிறகே அவரால் அதை உணர முடிந்தது. அவர் விழுவதை நான் பார்த்தேன். ஆனால், உடனே போய் அவரை தூக்க முடியாது. தாக்குதல் பலமாக இருந்தது. 15 நிமிடங்கள் அவர் துடிப்பதைப் பார்க்கிறோம். எங்களால் ஒன்றுமே செய்ய முடியாத சூழல். கண்கள் கலங்கியபடி நாங்கள் மறுபுறம் தவித்து கொண்டிருந்தோம்.

இறுதியாக முகுந்த் அருகில் சென்று அவரை தூக்கி இழுத்துக் கொண்டு வெளியே வந்தேன். அப்போதே அவர் நிலை குலைந்து காணப்பட்டார். என் கண்முன் அவர்  உயிருக்கும் போராடியதைப் பார்த்த போது என்னால் தாங்கவே முடியவில்லை. பின்னர்,  ஹெலிகாப்டரில் ஏற்றி அவரை சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். மறுநாள் அவர் வீரமரணமடைந்தார் என தகவல் கிடைத்தது. அவருக்குச் சீருடையில் வீர வணக்கம் செலுத்திட்டு, அறைக்கு வந்து கதறி அழுதோம். ராணுவ உடையில் நாங்கள் அழ முடியாது. அதற்கு இடம் இல்லை” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

பாலாவின் ‘வணங்கான்’ ரிலீஸ் எப்போது?

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (16.11.2024 முதல் 15. 12.2024 வரை) 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel