ADVERTISEMENT

கலைவாணரின் நஷ்டத்தை தனது எழுத்தால் மாற்றிய கலைஞர்

Published On:

| By Minnambalam Desk

kalaignar reversed Kalaivanar's loss

கலைவாணர் என். எஸ். கே பொருளாதார ரீதியாக தோல்விகளை சந்தித்த காலம்.

பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தியாகராஜ பாகவதரோடு கலைவாணரும் குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து மீண்டு வந்திருந்த நேரம் அது.

ADVERTISEMENT

1950 களில் மலையாளத்தில் சுப்ரபா என்று ஒரு நாடகம் மிகப் பிரபலமாக இருந்தது.. அந்த நாடகத்தை திரைப்படமாக எடுக்க நினைத்தார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். கலைஞரிடம் சொன்னார்..

சுப்ரபா நாடகத்தின் எழுத்தாளர் அடூர் முன்ஷி பரமேஸ்வரன் பிள்ளையும், கலைஞரும் இணைந்து திரைக்கதை உருவாக்கினர்.

ADVERTISEMENT

வசனத்தைக் கலைஞர் எழுதினார்..

கட்டாயத் திருமண எதிர்ப்பையும் பெண் சுதந்திரத்தையும் அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தை என்.எஸ்.கே தயாரித்து இயக்கினார்.

ADVERTISEMENT

1951 ஆகஸ்டில் வெளிவந்த மணமகள் படம் மிகப்பெரிய வெற்றியையும், கலைவாணருக்கு லாபத்தையும் கொடுத்தது..

அடுத்த மாதமே கலைஞருக்கு ஒரு ஸ்டாண்டர்ட் காரை பரிசாக அளித்தார். அந்தக் காருடன் அறிஞர் அண்ணாவுடன் எடுத்துக்கொண்ட படம் இது.

எழுத்தே பெரும் செல்வம்

-ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share