கலைஞரின் கனவு இல்ல திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று (மே 28) வெளியிட்டுள்ளது.
வீடு இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தரும் திட்டத்தை முன்னாள் முதல்வர் கலைஞர் 1975-ஆம் ஆண்டு தொடங்கிவைத்தார்.
இந்தநிலையில், குடிசை இல்லா தமிழகம் என்ற இலக்கை எட்டும் வகையில், கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் 2030-ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்று தமிழக பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அந்தவகையில், முதல்கட்டமாக 2024 – 2025 காலகட்டத்தில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் தலா ரூ.3.5 லட்சம் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பொன்னையா இன்று வெளியிட்டுள்ள்ளார்.
அதன்படி,
“கலைஞர் கனவு இல்ல திட்டத்தில், வீடுகள் அனைத்தும் 360 சதுர அடி அளவில் சமையலறையுடன் இருக்க வேண்டும்.
ஓலை அல்லது ஹாஸ்பெட்டா சீட் அமைக்க கூடாது. 300 சதுர அடி ஆர்சிசி கூரையுடனும் மீதமுள்ள 60 சதுர அடிக்கு தீப்பிடிக்காத கூரையாக அமைக்க வேண்டும்.
ஒரு வீட்டுக்கான தொகை ரூ.3.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
வீட்டின் சுவர்கள் செங்கல், இண்டர்லாக் பிரிக், ஏசிசி பிளாக் ஆகியவற்றால் கட்டப்பட்டிருக்க வேண்டும்.
தகுதியான பயானாளிகளை கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி உதவி பொறியாளர், மண்டல துணை வட்டார வளர்சி அலுவலர் அடங்கிய குழு தேர்வு செய்யும்.
குடிசை வீடுகள் சர்வே விவரங்களை மே 31-ஆம் தேதிக்குள் ஊரக வளர்ச்சித்துறை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்