“ஐஐடி-யில் சீட் கிடைச்சா லைஃப் செட்டில்… ஆனா அந்த என்ட்ரன்ஸ் எக்ஸாம் தான் மலையளவு பெருசா இருக்கே!” என்று பயப்படும் மாணவர்களா நீங்கள்? பயத்தை விடுங்கள், திட்டமிடுங்கள்!
இந்தியாவின் உயரிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான ஐஐடி-க்களில் (IITs) சேர்வதற்கான ‘ஜேஇஇ அட்வான்ஸ்டு 2026’ (JEE Advanced 2026) தேர்வு குறித்த முழுமையான அறிவிப்பை, இம்முறைத் தேர்வை நடத்தும் ஐஐடி ரூர்கி (IIT Roorkee) வெளியிட்டுள்ளது.
முக்கியத் தேதிகள் (டைரி-யில் குறித்துக்கொள்ளுங்கள்):
ஐஐடி ரூர்கி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அட்டவணை இதோ:
- விண்ணப்பப் பதிவு ஆரம்பம்: ஏப்ரல் 23, 2026 (மாலை 5 மணி முதல்).
- விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: மே 2, 2026 (மாலை 5 மணி வரை).
- அட்மிட் கார்டு (Admit Card): மே 8, 2026 முதல் மே 17, 2026 வரை பதிவிறக்கம் செய்யலாம்.
- தேர்வு நாள்: மே 17, 2026 (ஞாயிற்றுக்கிழமை).
- தேர்வு முடிவுகள் (Results): ஜூன் 8, 2026.
தேர்வு எப்படி நடக்கும்?
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. இரண்டையும் எழுதுவது கட்டாயம்!
- தாள் 1 (Paper 1): காலை 9:00 மணி முதல் 12:00 மணி வரை.
- தாள் 2 (Paper 2): மதியம் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை.
விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?
- பெண் மாணவர்கள் (அனைத்துப் பிரிவு): ரூ.1,600.
- எஸ்சி (SC), எஸ்டி (ST), மாற்றுத்திறனாளிகள் (PwD): ரூ.1,600.
- மற்ற அனைத்துப் பிரிவினர் (General/OBC): ரூ.3,200.
யாரெல்லாம் எழுதலாம்?
முதற்கட்டத் தேர்வான ஜேஇஇ மெயின் (JEE Main) 2026 தேர்வில், அதிக மதிப்பெண் பெறும் முதல் 2.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே இந்த அட்வான்ஸ்டு தேர்வை எழுதத் தகுதி பெறுவார்கள்.
மாணவர்களே… ஐஐடி ரூர்கி எப்போதுமே கணக்கு (Maths) பாடத்தில் கொஞ்சம் ‘ட்விஸ்ட்’ வைப்பார்கள். அதனால் மேக்ஸ் ஃபார்முலாக்களை (Formula) விரல் நுனியில் வைத்திருங்கள்.
இன்னொரு முக்கியமான விஷயம்… காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மூளையை அலர்ட்டாக வைத்திருக்கப் பழகிக்கொள்ளுங்கள். நிறைய மாணவர்கள் பேப்பர்-1 நல்லா பண்ணிட்டு, மதியம் சாப்பிட்ட பிறகு பேப்பர்-2வில் சோர்ந்து போயிடுவாங்க. அந்தத் தப்பை நீங்க பண்ணாதீங்க. இப்போதிலிருந்தே மதியம் தூங்காமல் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கோங்க. இந்த வருஷம் ஐஐடி சீட் நமக்குதான்!
