ஐபிஎல் 2024 இறுதிப்போட்டியில் இன்று (மே 26) கொல்கத்தா – ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் 17 வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
முதல் குவாலிஃபையர் சுற்றில் ஐதராபாத் அணியை கொல்கத்தா அணி வீழ்த்தியது. தொடர்ந்து இரண்டாவது குவாலிஃபையர் சுற்றில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

இதன்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை இறுதிப்போட்டியில் இன்று எதிர்கொள்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸல், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா ஆகிய வீரர்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடுகிறார்கள்.
சன் ரைசர்ஸ் ஐதராபாத்:
பேட் கம்மின்ஸ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், ராகுல் திரிபாதி, நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சம்த, ஷாபாஸ் அகமது, புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், தங்கராசு நடராஜன் போன்ற வீரர்கள் ஐதராபாத் அணிக்காக இறுதிப்போடியில் களமிறங்க உள்ளனர்.
ஐபிஎல் பரிசுத்தொகை:
ஐபிஎல் 2024 தொடருக்கான பரிசுத் தொகையாக மொத்தம் ரூ.46.5 கோடியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி, இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.20 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும். தோல்வி அடையும் அணிக்கு ரூ.13 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் மூன்றாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணிக்கு ரூ.7 கோடியும், 4வது இடத்தில் உள்ள பெங்களூருவுக்கு ரூ.6.5 கோடியும் கொடுக்கப்படும்.
ஆரஞ்ச் கேப் – பர்புல் கேப்:
ஐபிஎல் 2024 தொடரில் இதுவரை நடந்து முடிந்த 15 போட்டிகளில், 741 ரன்கள் எடுத்து பெங்களூரு அணியின் வீரர் விராட் கோலி ஆரஞ்ச் தொப்பியை வைத்துள்ளார். இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் விராட் கோலியின் ரன்னை விட அதிக ரன் பெறும் வாய்ப்பு குறைவு தான். அதனால், ஆரஞ்ச் தொப்பி பெற்றதற்காக அவருக்கு ரூ.15 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.
மேலும், பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளரான ஹர்ஷல் படேல் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்புல் கேப்-பை வைத்துள்ளார். அவருக்கும் ரூ.15 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
தொடர்ந்து, வளர்ந்து வரும் வீரருக்கு ரூ.20 லட்சமும், மிகவும் மதிப்புமிக்க வீரருக்கு ரூ.12 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உலக பட்டினி தினம்: விஜய்யின் உத்தரவு – என்னன்னு தெரிஞ்சுகோங்க!
டெல்லி: தனியார் மருத்துவமனையில் தீ விபத்து – 7 குழந்தைகள் பரிதாப பலி!
