உலக பட்டினி தினம்: விஜய்யின் உத்தரவு – என்னன்னு தெரிஞ்சுகோங்க!

Published On:

| By indhu

World Hunger Day: Vijay's Order - Find Out!

உலக பட்டினி தினமான மே 28ஆம் தேதியன்று தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க உள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் இன்று (மே 26) அறிவித்துள்ளது.

உலக பட்டினி தினம்:

உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை உலக நாடுகள் சரிசெய்ய வலியுறுத்தியும் உலக பட்டினி தினம் ஆண்டு தோறும் மே 28ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் அன்னதானம்:

கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், உலக பட்டினி தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிக்கை  இன்று (மே 26) வெளியிடப்பட்டுள்ளது.

World Hunger Day: Vijay's Order - Find Out!

அந்த அறிக்கையில், “பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும், அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உலகப் பட்டினி தினமான, மே 28ஆம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

மாவட்ட, அணி, நகரம், ஒன்றியம், கிளை, மற்றும் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய தேர்தல் வழிகாட்டும் விதிமுறைகளைப் பின்பற்றிப் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி, மக்கள் நலப்பணியில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

IPL Final: மழை வந்தால் என்ன ஆகும்?

தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!- முழு விவரத்தைப் பாருங்க…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment