இந்தியா பாகிஸ்தான இடையே நடந்து வரும் மோதலில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார். india pakistan attack soldier dies
மே 7ஆம் தேதி முதல் இந்தியா பாகிஸ்தான் இடையே தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில் நாட்டில் போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லையோர மாநிலங்கள் இருளில் மூழ்கடிக்கப்பட்டன.
நேற்று இரவு முதல் இந்தியா பாகிஸ்தான் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.
பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சிகளை எஸ்.400 என்ற வான்வழி பாதுகாப்பு அமைப்பு மூலம் இந்தியா இடைமறித்து அழித்து வருகிறது.
இந்தநிலையில் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த இந்திய வீரர் முரளி நாயக் வீர மரணம் அடைந்துள்ளார்.
ஆந்திர மாநிலம், கோரண்ட்ல மண்டலத்தின் கடம் தாண்டா பஞ்சாயத்தில் உள்ள கல்லி தான்டா கிராமத்தைச் சேர்ந்த இவர் மிகுந்த ஆர்வத்துடன் ராணுவத்தில் சேர்ந்துள்ளார்.
அவரின் துணிச்சலான பணியை பாராட்டி தான் இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீரில் அவருக்கு பணி வழங்கியிருக்கிறது.
இந்த சூழலில் பாகிஸ்தான் துப்பாக்கி சூட்டின் போது துணிச்சலுடன் எதிரிகளை எதிர்கொண்ட முரளி நாயக்கிற்கு துப்பாக்கி சூடு காயம் ஏற்பட்டது.
இதனால் பலத்த காயம் அடைந்த அவர் போர்க்களத்தில் வீர மரணமடைந்தார்.
அவரது மரணம் குறித்து குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சொந்த ஊருக்கு உடல் எடுத்து வரும் பணிகள் நடந்து வருகின்றன.
தங்கள் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழந்தது கல்லிதான்டா கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முரளி நாயக்கிற்கு இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘வீர தியாகி முரளி நாயக்கிற்கு நாங்கள் மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறோம். துக்கத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது தியாகம் என்றென்றும் எங்கள் நினைவில் ஆழ்ந்த நன்றியுடன் மரியாதையுடனும் இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய இராணுவ வீரர் முரளி நாயக், பாகிஸ்தான் நடத்திய தொடர் பீரங்கித் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. நம்மைக் காப்பதற்காக இன்னுயிரை ஈந்த அந்த பெருமகனுக்கு எனது வீரவணக்கங்களை செலுத்துகிறேன்.
பயங்கரவாதிகளின் புகலிடமாகத் திகழும் பாகிஸ்தான் இந்தியா மீது அப்பட்டமாக பயங்கரவாதத் தாக்குதல்களை ஏவி விட்டு வருகிறது. அவற்றிலிருந்து நாட்டையும், நம்மையும் காக்கும் புனிதப் பணியில், தங்களின் உயிரைப் பணயம் வைத்து நமது படைவீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மிகவும் நெருக்கடியான இந்தக் காலக்கட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு அவர்களுக்கு துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். india pakistan attack soldier dies