போதும் தங்கமே தாங்காது.. ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.2,560 உயர்வு

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold and Silver Rate on 12 December 2025

சென்னையில் இன்று (டிசம்பர் 12) ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.2,560 வரை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை விலை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியான உயர்வை சந்தித்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் இன்று ஒரே நாளில் ரூ.2,560 வரை உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT
தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.200 வரை உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.120 வரை உயர்ந்து ரூ.12,370 வரை உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் இன்று பிற்பகலில் ரூ.960 உயர்ந்து ரூ.98,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.2,560 உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று காலை 18 கேரட் ஆபரணத்தங்கம் ரூ.185 வரை உயர்ந்த நிலையில் பிற்பகலில் மேலும் ரூ.100 உயர்ந்து 10,330 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
வெள்ளி விலை நிலவரம்

ஏழைகளின் தங்கம் என அழைக்கப்படும் வெள்ளியின் விலை இன்று காலை ஒரு கிராம் ரூ.6 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.216க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1000 உயர்ந்து ரூ.2,16,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்

ADVERTISEMENT
11-12-202596,400
10-12-202596,240
9-12-202596,000
8-12-202596,320
7-12-202596,320
6-12-202596,320
5-12-202596,000
4-12-202596,160
3-12-202596,480
2-12-202596,320
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
11-12-2025209
10-12-2025207
9-12-2025199
8-12-2025198
7-12-2025199
6-12-2025199
5-12-2025196
4-12-2025200
3-12-2025201
2-12-2025196
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share