ஒரு லட்சத்தை நெருங்குகிறதா தங்கம்.. ராக்கெட் வேகத்தில் பறக்கும் தங்கம் வெள்ளி

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை இன்று (டிசம்பர் 12) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1600 உயர்ந்துள்ளது. வெள்ளியும் இன்று ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.6000 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நகைப்பிரியர்களிடையே கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தை விலை நிலவரம், உலகளாவிய தங்கத்தின் தேவை அதிகரிப்பு, டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு, உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் பெடரல் வங்கி வட்டிவிகிதம் 0.25% வரை குறைக்கப்பட்டுள்ளதால் அதன் தாக்கம் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் எதிரொலிக்க தொடங்கி உள்ளது. இந்த ஆண்டில் கடந்த அக்டோபர் 17ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.97,600க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் ரூ.200 தாண்டி விற்பனையானது. தீபாவளிக்கு பிறகு சற்றே குறைந்த தங்கம் விலை நிலவரம் இன்று மீண்டும் வரலாற்றில் புதிய உச்சத்ததை தொட்டுள்ளது. ஒரு சவரன் தங்கம் இன்று ரூ.98,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.200 உயர்ந்து ரூ.12,550க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1600 உயர்ந்து ரூ.98,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.185 உயர்ந்து ரூ.10,230க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.6 உயர்ந்து ரூ.215க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.6000 உயர்ந்து ரூ.2,15,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்

ADVERTISEMENT
11-12-202596,400
10-12-202596,240
9-12-202596,000
8-12-202596,320
7-12-202596,320
6-12-202596,320
5-12-202596,000
4-12-202596,160
3-12-202596,480
2-12-202596,320
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
11-12-2025209
10-12-2025207
9-12-2025199
8-12-2025198
7-12-2025199
6-12-2025199
5-12-2025196
4-12-2025200
3-12-2025201
2-12-2025196
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share