இஸ்ரேல் ஈரான் போர் பதற்றம் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று (பிப்ரவரி 28) அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் இன்று ஒரே நாளில் ரூ. 650 வரை உயர்ந்துள்ளது. அதேபோல் வெள்ளி விலை ஒரு கிராம் இன்று ரூ.25 வரை உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலக அளவிலான போர்ப் பதற்றங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5000 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.20,000 உயர்ந்துள்ளது.
தற்போதைய தங்கம் விலை
சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.300 உயர்ந்த நிலையில் பிற்பகலில் மேலும் ரூ.350 உயர்ந்து ரூ.15,550க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கம் இன்று காலை ரூ. 2400 வரை உயர்ந்த நிலையில் பிற்பகலில் மீண்டும் ரூ. 2,800 உயர்ந்துள்ளது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ. 5200 உயர்ந்து ரூ.1,24,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் ஆபரணத்தங்கம் இன்று பிற்பகலில் ஒரு கிராம் ரூ. 290 வரை உயர்ந்து ரூ.13,300க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய வெள்ளி விலை
சென்னையில் இன்று பிற்பகலில் ஒரு கிராம் வெள்ளி ரூ.20 உயர்ந்து ரூ.320க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 20,000 உயர்ந்து ரூ.3,20,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 27-2-2026 | 1,19,200 |
| 26-2-2026 | 1,19,360 |
| 25-2-2026 | 1,19,440 |
| 24-2-2026 | 1,19,120 |
| 23-2-2026 | 1,18,880 |
| 22 -2-2026 | 1,17,440 |
| 21-2-2026 | 1,17,440 |
| 20-2-2026 | 1,15,360 |
| 19-2-2026 | 1,16,000 |
| 18-2-2026 | 1,13,840 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
| 27-2-2026 | 295 |
| 26-2-2026 | 295 |
| 25-2-2026 | 295 |
| 24-2-2026 | 290 |
| 23-2-2026 | 300 |
| 22-2-2026 | 290 |
| 21-2-2026 | 290 |
| 20-2-2026 | 270 |
| 19-2-2026 | 270 |
| 18-2-2026 | 260 |
