அதிரடியாக சரிந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (ஜனவரி 8) ஒரு சவரன் தங்கம் ரூ. 400 வரை குறைந்து விற்பனை செய்யப்படுவது முதலீட்டாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலக அளவிலான தங்கத்தின் தேவை உள்ளிட்டட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது மாற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 வரை குறைந்துள்ளது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 50 குறைந்து ரூ.12,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.400 குறைந்து ரூ.1,02,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் சென்னையில் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.40 குறைந்து ரூ. 10, 640க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று 1 கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.272 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 குறைந்து ரூ.2,72,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
7-1-20261,02,400
6-1-20261,02,640
5-1-20261,02,080
4-1-20261,00,800
3-1-20261,00,800
2-1-20261,00,640
1-1-202699,520
31-12-202599,840
30-12-20251,00,800
29-12-20251,04,160
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
7-1-2026277
6-1-2026271
5-1-2026266
4-1-2026257
3-1-2026257
2-1-2026260
1-1-2026256
31-12-2025257
30-12-2025258
29-12-2025281

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share