தங்கம் வாங்கப் போறீங்களா? இன்று ஒரே நாளில் ரூ.1,000-க்கு மேல் குறைந்த தங்கம் விலை: வெள்ளி நிலவரம் என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,040 வரை குறைந்து நுகர்வோருக்கு நிம்மதியை அளித்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உலகளாவிய தங்கத்தின் தேவை மற்றும் சர்வதேச போர் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை நிலவரம்:

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.130 குறைந்து, ரூ.14,070-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,040 சரிந்து, ரூ.1,12,560-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், 18 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.115 குறைந்து, ரூ.11,795-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

வெள்ளி விலை நிலவரம்:

தங்கம் விலை குறைந்த போதிலும், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி மாற்றமின்றி ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)
7-6-20261,13,600
6-6-20261,13,600
5-6-20261,15,440
4-6-20261,15,840
3-6-20261,16,000
2-6-20261,16,000
1-6-20261,16,000
31-5-20261,17,040
30-5-20261,17,040
29-5-20261,16,800

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

7-6-2026270
6-6-2026280
5-6-2026280
4-6-2026285
3-6-2026290
2-6-2026290
1-6-2026290
31-5-2026290
30-5-2026290
29-5-2026290
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share