சென்னையில் இன்று (ஜூன் 5) ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மற்றும் உலகளாவிய போர் பதற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால், நாடு முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்று தங்கம் விலையோடு சேர்ந்து, வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.5,000 வரை அதிரடியாகக் குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்:
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,430-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.400 குறைந்து, ரூ.1,15,440-க்கு விற்பனையாகிறது.
அதேபோல், 18 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.55 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,105-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்:
வெள்ளி விலையும் இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.5,000 குறைந்து ரூ.2,80,000-க்கு விற்பனையாகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)
| 4-6-2026 | 1,15,840 |
| 3-6-2026 | 1,16,000 |
| 2-6-2026 | 1,16,000 |
| 1-6-2026 | 1,16,000 |
| 31-5-2026 | 1,17,040 |
| 30-5-2026 | 1,17,040 |
| 29-5-2026 | 1,16,800 |
| 28-5-2026 | 1,16,000 |
| 27-5-2026 | 1,17,200 |
| 26 -5-2026 | 1,17,840 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)
| 4-6-2026 | 285 |
| 3-6-2026 | 290 |
| 2-6-2026 | 290 |
| 1-6-2026 | 290 |
| 31-5-2026 | 290 |
| 30-5-2026 | 290 |
| 29-5-2026 | 290 |
| 28-5-2026 | 285 |
| 27-5-2026 | 290 |
| 26 -5-2026 | 295 |
