கேட் (GATE) 2026: ஹால் டிக்கெட் வந்தாச்சு! எக்ஸாம் சென்டர் எங்கே? உடனே செக் பண்ணுங்க!

Published On:

| By Santhosh Raj Saravanan

gate 2026 admit card download exam date details

“ஐஐடி-ல எம்.டெக் (M.Tech) படிக்கணும்… இல்லன்னா மத்திய அரசு நிறுவனத்துல (PSU) கைநிறைய சம்பளத்தோட வேலை பார்க்கணும்…” இப்படி ஒரு கனவு வெச்சிருக்கீங்களா? அப்போ இது உங்களுக்கான முக்கியமான நேரம்.

நாடு முழுவதும் உள்ள இன்ஜினியரிங் மாணவர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேட் 2026 (GATE 2026) தேர்வுக்கான ஹால் டிக்கெட் (Admit Card) வெளியாகியுள்ளது. “கடைசி நேரத்துல டவுன்லோட் பண்ணிக்கலாம்”னு அசால்ட்டா இருக்காதீங்க. சர்வர் பிஸி ஆவதற்குள் இப்போதே முந்துங்கள்!

ADVERTISEMENT

தேர்வு எப்போது? முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான இந்த நுழைவுத் தேர்வு வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது.

  • தேர்வு தேதிகள்: பிப்ரவரி 1, 2, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கம்ப்யூட்டர் முறையில் (CBT) இரண்டு ஷிப்டுகளாகத் தேர்வு நடக்கும்.

ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?

ADVERTISEMENT
  • லிங்க்: கேட் தேர்வின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லுங்கள்.
  • லாகின்: உங்கள் பதிவு எண் (Enrollment ID) அல்லது ஈமெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்டை டைப் செய்து லாகின் செய்யுங்கள்.
  • டவுன்லோட்: முகப்புப் பக்கத்தில் “Download Admit Card” என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை க்ளிக் செய்தால் உங்கள் ஹால் டிக்கெட் PDF வடிவில் வந்துவிடும்.
  • பிரிண்ட்: மறக்காமல் அதைத் தரமான தாளில் பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஹால் டிக்கெட்டில் என்ன செக் பண்ணனும்? டவுன்லோட் செய்த கையோடு வேலையை முடித்துவிடாதீர்கள். கீழே உள்ள விஷயங்கள் சரியாக இருக்கிறதா எனப் பாருங்கள்:

  • உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதி.
  • தேர்வு மையம் (Exam Center) – உங்களுக்குப் போடப்பட்டுள்ள ஊர் மற்றும் இடம்.
  • உங்கள் புகைப்படம் மற்றும் கையெழுத்து (தெளிவாக இருக்க வேண்டும்).
  • தேர்வுத் தாள் (Subject Code) – நீங்கள் விண்ணப்பித்த பாடம் தானா? என்பதை சரி பார்த்துக் கொள்ளவும்.

படிப்பு மட்டும் முக்கியம் இல்ல… இந்த சின்ன விஷயங்கள் தான் வெற்றியைத் தீர்மானிக்கும்!

ADVERTISEMENT
  • லொகேஷன் பாருங்க: தேர்வு மையம் உங்களுக்குத் தெரியாத ஏரியாவில் இருந்தால், முந்தைய நாளே சென்று பார்த்துவிடுவது நல்லது. அல்லது கூகுள் மேப்பில் தெளிவான ரூட் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
  • போட்டோ மங்கலா இருக்கா?: ஹால் டிக்கெட்டில் உங்கள் போட்டோ தெளிவாக இல்லை என்றால், உடனே தேர்வு நடத்தும் அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுங்கள். கூடவே ஒரிஜினல் போட்டோவையும் கைவசம் வைத்திருப்பது பாதுகாப்பு.
  • ஐடி கார்டு மஸ்ட்: எக்ஸாம் அன்னைக்கு ஹால் டிக்கெட் மட்டும் போதாது. ஒரிஜினல் ஐடி கார்டு (ஆதார் அல்லது லைசென்ஸ்) கட்டாயம் தேவை. அதையும் எடுத்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், உடனே ஹெல்ப்லைனைத் தொடர்பு கொள்ளுங்கள். ஆல் தி பெஸ்ட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share