’செம்மரக் கடத்தல்’ கதை.. தனுஷின் ‘ஓம்’ டிரெய்லர்.. கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்.. ‘புஷ்பா’ சாதனையை முறியடிக்குமா?

By Mathi

|

Published on 14 Nov 2026, 5:21 AM

Dhanush OM Trailer

தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி நடித்துள்ள ‘ஓம்’ படத்தின் டிரெய்லர் நேற்று (நவ.13) தொழில்நுட்பக் கோளாறால் சிறிது நேரம் தாமதமாக திரையரங்குகளில் வெளியான நிலையில், தனுஷின் புதிய படமே வெளியானதைப் போல ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்து உற்சாகமாக கொண்டாடினர்.

‘அமரன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஓம்’. தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி ஆகியோருடன் ஸ்ரீலீலா, நஸ்ருதீன் ஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். தனுஷின் வன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து படத்தைத் தயாரித்துள்ளன.

ADVERTISEMENT

நவம்பர் 20-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் டிரெய்லரை நேற்று நவம்பர் 13-ந் தேதி இரவு 7 மணிக்கு வெளியிடப் படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், தொழில்நுட்பப் பிரச்சினை காரணமாக டிரெய்லர் வெளியீட்டில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டதாகத் தயாரிப்புக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் டிரெய்லர் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

ADVERTISEMENT

தியேட்டர்களில் தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்

‘ஓம்’ டிரெய்லர் வெளியான திரையரங்குகளில் தனுஷ் ரசிகர்கள் குவிந்தனர். தனுஷின் பேனர்கள், கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்து, ஆரவாரத்துடன் கொண்டாடி தீர்த்தனர். படம் வெளியானதைப் போல திரையரங்குகள் களைகட்டின.

‘ஓம்’ டிரெய்லரில் என்ன இருக்கிறது?

செம்மரக் கடத்தலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரெய்லரில் ஆந்திரா மாநிலம் திருப்பதி வனப் பகுதிகள், செம்மரக் கட்டைகள், கடத்தல் சம்பவங்கள், போலீசாரின் நடவடிக்கைகள், அதிரடியான சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி ஆகியோரின் கதாபாத்திரங்களும் டிரெய்லரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

படத்தின் பெயர் மாற்றம்

முதலில் ‘OM – Chapter 1: Udhiram – The Blood Wood’ என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட இந்தப் படம், தற்போது ‘O.M – Operation Mole’ என்ற பெயரில் வெளியாக உள்ளது.

யார் இந்த ‘பர்மா கார்த்திகேயன்’?

இந்தப் படத்தில் மம்மூட்டி ‘பர்மா கார்த்திகேயன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். செம்மரக் கடத்தலில் பர்மா (மியான்மர்) முக்கிய இடம் வகிக்கிறது. ஆந்திராவில் இருந்து வடசென்னைக்குக் கொண்டுவரப்படும் செம்மரக் கட்டைகள், அங்குள்ள பர்மா தொடர்புகள் மூலம் மணிப்பூர் மாநிலத்தின் தலைநகரான இம்பாலுக்குக் கொண்டு செல்லப்படுவதாகக் கூறப்படுகிறது.

பின்னர் மணிப்பூர் எல்லைப் பகுதிகள் வழியாக மியான்மருக்குக் கடத்தப்பட்டு, அங்கிருந்து சர்வதேச கள்ளச் சந்தைக்கு அனுப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது. திருப்பதி வனப்பகுதிகளில் வெட்டப்படும் செம்மரக் கட்டைகளுக்குச் சர்வதேச கள்ளச் சந்தையில் அதிக மதிப்பு உள்ளது. இந்தப் பின்னணியில் மம்மூட்டியின் கதாபாத்திரத்துக்குப் ‘பர்மா கார்த்திகேயன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

சாய் பல்லவியின் ‘ஆபரேஷன் ஓம்’

சாய் பல்லவி இந்தப் படத்தில் நித்யா ரெட்டி என்ற சிபிஐ அதிகாரியாக நடித்துள்ளார். செம்மரக் கடத்தல் தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் கதாபாத்திரத்தில் அவர் வருகிறார்.

திருப்பதி, திருவண்ணாமலை ஆகிய இரு பகுதிகளுக்கும் படத்தின் கதையில் தொடர்பு இருப்பதாக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

புஷ்பா’ சாதனையை முறியடிக்குமா தனுஷின் ‘ஓம்’?

செம்மரக் கடத்தலை மையமாகக் கொண்டு ஏற்கெனவே அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’, ‘புஷ்பா 2’ ஆகிய படங்கள் வசூலில் பட்டையைக் கிளப்பின. குறிப்பாக, ‘புஷ்பா 2’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வசூல் சாதனைகளைப் படைத்தது.

செம்மரக் கடத்தலை மையமாகக் கொண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’, ‘புஷ்பா 2’ ஆகிய படங்கள் வசூலில் பட்டையைக் கிளப்பின. குறிப்பாக, ‘புஷ்பா 2’ இந்திய அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. தற்போது அதே செம்மரக் கடத்தல் பின்னணியில் தனுஷின் ‘ஓம்’ திரைப்படமும் உருவாகியுள்ளது. ‘புஷ்பா’ படங்களின் வசூல் சாதனைகளை தனுஷின் ‘ஓம்’ முறியடிக்குமா?

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel