”தவறு உண்மையானால்… ” : கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ விவகாரம் குறித்து திருமாவளவன் பேட்டி!

By Kavi

|

Published on 13 Nov 2026, 5:23 PM

தவறு நடந்திருப்பது உண்மையென்றால் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை தேவை என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு அத்தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் புயலை கிளப்பியிருக்கிறது. 

ADVERTISEMENT

அருள் விக்னேஷ் மீது கடும் நடவடிக்கை தேவை என்று திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தவெக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. 

ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை அருள் விக்னேஷ் மறுத்து வருகிறார். அமைச்சர் நிர்மல் குமாரும், தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது எந்த தவறும் இல்லை என்று தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

இதுதொடர்பாக இன்று (நவம்பர் 13) சென்னையில்  செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு அவர்,  ”இதுபற்றி அமைச்சர் பதில் சொல்லியிருக்கிறார். இதை நாங்கள் சரி என்று சொல்லவில்லை.  தவறு நடந்திருப்பது உண்மை என்றால் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். 

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel