ஆற்றில் குதித்து அரசு மருத்துவர் தற்கொலை : விழுப்புரத்தில் அதிர்ச்சி!

By Kavi

|

Published on 13 Nov 2026, 4:29 PM

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் மருத்துவர் ஆற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் சரண்யா. 

ADVERTISEMENT

இவர் இன்று அரகண்டநல்லூர் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு படையினர் ஆற்றில் குதித்து தேடுதல் வேட்டையை நடத்தினர்.  

ADVERTISEMENT

சிறிது நேரத்தில் அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இது தொடர்பாக அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ADVERTISEMENT

இவரது தற்கொலைக்கு பணிச்சுமை காரணமாக அல்லது குடும்ப பிரச்சினை காரணமா உள்ளிட்ட கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

அவரது குடும்பத்தினர் மற்றும் சக மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

சரண்யாவின் கணவர் வலம்புரி செல்வம். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களாக சரண்யா தனது தந்தை வீட்டில் இருந்து பணிக்கு சென்று வந்ததாக தகவல்கள் வருகின்றன. 

இந்த நிலையில் வழக்கம்போல் காலையில் பணிக்கு புறப்பட்டு சென்ற அவர், தனது கைப்பை மற்றும் கோட் ஆகியவற்றை ஆற்றின் பழைய பாலத்தின் மேல் பகுதியில் வைத்திருக்கிறார்.. தொடர்ந்து தனது இமெயில் ஐடி மற்றும் பாஸ்வோர்டையும் ஒரு வெள்ளை பேப்பரில் எழுதி வைத்துவிட்டு ஆற்றில் குதித்து இருக்கிறார் என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. 

சரண்யாவின் தற்கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடந்துவரும் நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் முழுமையான விசாரணைக்கு பிறகு மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்றும் காவல்துறை கூறுகிறது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel