ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ.5.35 லட்சம் கோடி முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் தற்போதைய அரசு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்தவில்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “ஒரே நாளில் ₹5.35 லட்சம் கோடி முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்த ஆந்திரப் பிரதேசம்!
இவற்றில் பெரும்பாலானவை தமிழ்நாடு போட்டியிட்டுப் பெற்றிருக்கக்கூடிய முதலீட்டு வாய்ப்புகள்!
நேற்று ஆந்திராவில் அறிவிக்கப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்கள்:
Reliance – ₹2.73 லட்சம் கோடி
Greenko – ₹45,000 கோடி
CleanMax – ₹41,000 கோடி
Megha – ₹36,000 கோடி
Kia – ₹18,878 கோடி
Rashmi – ₹18,500 கோடி
JSW – ₹15,000 கோடி
GAIL – ₹13,500 கோடி
TVK அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்களாகிவிட்டன! ஆனால் திராவிட மாடல் அரசு அடித்தளமிட்ட தொழில் முதலீட்டுத் திட்டங்களைத் தாண்டி, இந்த ஆட்சி புதிதாக ஈர்த்த முதலீடுகள் எங்கே! இதில் வெட்கமே இல்லாமல், முந்தைய ஆட்சியின் முயற்சியில் உருவான முதலீடுகளையும் தங்களது சாதனையாகக் கணக்குக் காட்டுகிறார்கள்!
தமிழ்நாட்டின் TVK அரசு, தனது எம்.எல்.ஏ.க்களைத் தக்கவைக்க ஐந்து நட்சத்திர விடுதிகளில் தடுப்புகளை அமைப்பதில் மும்முரமாக இருக்கிறது!
ஆனால் ஆந்திரப் பிரதேசமோ முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான தொழில் சூழலை உருவாக்குவதில் தீவிரமாக இருக்கிறது!
முந்தைய ஆட்சியின் உழைப்பில் கிடைத்த முதலீடுகளை மட்டுமே வைத்துக்கொண்டு புதிய தொழில் வளர்ச்சியை உருவாக்க முடியாது!
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, தமிழ்நாட்டின் நாளைய தொழிற்சாலைகளுக்கான முதலீட்டுப் பேச்சுவார்த்தைகள், இன்று மற்ற மாநிலங்களில் நம் கண்முன்னே நடைபெறுகின்றன!
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்!
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள்!
எம்.எல்.ஏ.க்களுடன் பேரம் பேசுவதை நிறுத்துங்கள்!
முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்குங்கள்” என தெரிவித்துள்ளார்.









