தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய மனு தள்ளுபடி : உதயநிதிக்கு செக்!

By Kavi

|

Published on 13 Nov 2026, 11:51 AM

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

2026 சட்டப்பேரவை தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு முன்னாள் துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார். 

ADVERTISEMENT

அவரது வெற்றியை எதிர்த்து மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தனக்கு எதிரான இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி உதயநிதி தனியாக ஒரு மனு தாக்கல் செய்தார். 

இந்த வழக்கில் உதயநிதி சார்பில், தேர்தல் வழக்கு தாக்கல் செய்ய நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிந்த பிறகு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. 

ADVERTISEMENT

உதயநிதிக்கு எதிராக மனு தாக்கல் செய்த மிலானி தரப்பில், இந்த வழக்கு குறித்த காலக்கெடுவுக்குள் தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற பதிவு துறை அதை ஏற்று எண்ணிட்டுள்ளதால் வழக்கை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. 

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி ஜி அருள்முருகன், தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி, உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார். 

ADVERTISEMENT

இந்த நிலையில் இன்று (நவம்பர் 13) உத்தரவு பிறப்பித்த நீதிபதி, உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

பிரதான தேர்தல் வழக்கு விசாரணையை டிசம்பர் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel