வங்க கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

By Pandeeswari Gurusamy

|

Published on 13 Nov 2026, 9:37 AM

Low-Pressure Area

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று அதிகாலை 5:30 மணியளவில் இந்தப் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவும் வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

இதன் காரணமாக, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடையும் பட்சத்தில், நவம்பர் 15 முதல் 17 வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், நவம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் மத்திய வங்கக்கடல் பகுதிகளிலும் காற்றின் வேகம் மேலும் அதிகரித்து மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகம் வரையிலும் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனால், குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காலை உருவாகியுள்ள இந்தப் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் பட்சத்தில், ஈரான் பரிந்துரைத்த ‘அக்வான்’ எனப் பெயரிடப்படும். ‘அக்வான்’ என்பது பாரசீக மொழியில் ‘தீய எண்ணம்’ என்று பொருள்படும். இது பாரசீக மொழியிலிருந்து வந்த ஒரு புராணப் பெயராகும்; ஈரானிய இதிகாசமான ‘ஷாநாமா’-வில் (Shahnameh) இடம்பெற்ற ஒரு மாயாஜால அரக்கனின் பெயரே அக்வான்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel