கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா இன்று (நவம்பர் 13) குழந்தைகள் தின விழாவில் பங்கேற்றார்.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகச் செய்திகள் வெளியாயின. இது குறித்து அவரது கணவர் புகார் அளித்துள்ள நிலையில், எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக மற்றும் அதிமுக தரப்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு இன்று (நவம்பர் 13) நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் வன்னி அரசு பங்கேற்றார். அவருடன் மாவட்ட ஆட்சியர் பத்மஜாவும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கிய ஆட்சியர், நிகழ்ச்சியில் பாதியில் கிளம்பிவிட்டதாகச் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. ஆனால், நிகழ்ச்சி முடியும் வரை ஆட்சியர் அதில் முழுமையாகப் பங்கேற்றார். இந்த விழாவில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, நேற்று கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் நடைபெற்ற அரசு விழாவிலும் மாவட்ட ஆட்சியர் பத்மஜா பங்கேற்காமல் தவிர்த்த நிலையில், பத்திரிகையாளர்களைத் தவிர்க்கும் நோக்கில் அவர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டிருந்த நிலையில் இன்று அமைச்சர் வன்னி அரசு கலந்து கொண்ட குழந்தைகள் தின நிகழ்ச்சியில் ஆட்சியர் பங்கேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.









