ஜெம் வீரமணி வழக்கை விசாரித்த 3 பெண் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

By Kavi

|

Published on 14 Nov 2026, 3:46 AM

Police Officers Transfer

ஜெம் வீரமணி வழக்கை விசாரணை செய்து வரும் சிறப்பு விசாரணை குழுவில் இடம் பெற்றிருந்த 3 பெண் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

சென்னை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை காவல் ஆணையர் கீதாஞ்சலி,

ADVERTISEMENT

ஆவடி காவல் ஆணையரகத்தில் காவல் துணை ஆணையராக (தலைமையகம் மற்றும் நிர்வாகம்) பணியாற்றிய டாக்டர் வனிதா மற்றும்,

சென்னை மாநகரக் காவல்துறையின் IUCAW பிரிவில் உதவி காவல் ஆணையராகப் பணியாற்றிய வி. ராஜலட்சுமி ஆகியோர், காலி பணியிட ஒதுக்கீட்டுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதாவது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக உள்துறை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை தேன்மொழி ஐபிஎஸ் தலைமையிலான பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட எஸ்.ஐ.டி குழு விசாரித்து வருகிறது. நவம்பர் 12ஆம் தேதி போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கையை  எஸ்.ஐ.டி குழு தாக்கல் செய்தது.  இந்தசூழலில் இக்குழுவில் இடம் பெற்றிருந்த கீதாஞ்சலி, வனிதா, ராஜலட்சுமி ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel