தனுஷின் ‘ஓம்’ வெளியீடு: முதல் நாள் வசூல் விவரம்!

By Kavi

|

Published on 20 Nov 2026, 7:06 PM

தனுஷ் ஓம் படம்

‘அமரன்’ வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் இணைந்துள்ள படம் ‘ஓம்’.

தமிழ்நாடு – ஆந்திரா எல்லையில் நடக்கும் செம்மரக் கடத்தலையும் அதன் பின்னணியில் இருக்கும் சர்வதேச வலை அமைப்பையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் இன்று (நவம்பர் 20) வெளியானது.

ADVERTISEMENT

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ், சாய் பல்லவி, மம்மூட்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு திரையரங்குகளில் குவிந்த தனுஷ் ரசிகர்கள், அதிகாலை 6:00 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டதால் உற்சாகமடைந்தனர்.

ADVERTISEMENT

இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

இந்தநிலையில் ‘ஓ.எம் – ஆபரேஷன் மோல்’ திரைப்படம் முதல் நாளில் மொத்தம் 4,992 காட்சிகளில் திரையிடப்பட்டு, இன்று ரூ.11.20 கோடி நிகர வசூலை ஈட்டியுள்ளதாக படங்களுக்கான வசூல் நிலவரத்தை வெளியிடும் சாக்னில்க் இணையதளம் கூறியுள்ளது. 

ADVERTISEMENT

அந்த தகவல் படி, தமிழ்: 3,074 காட்சிகளில் ரூ.8.47 கோடி
தெலுங்கு 1,209 காட்சிகளில் ரூ.2.49 கோடி
இந்தி  709 காட்சிகளில் ரூ.24 லட்சம் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. 

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel