திருப்பரங்குன்றம் சர்வே தூணில் தீபம் ஏற்ற நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம அனுமதி வழங்கியுள்ளது.
2025ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இது தீப தூண் அல்ல சர்வே தூண். இதுவரை அந்த தூணில் தீபம் ஏற்றியதாக மரபு இல்லை என்று தமிழக அரசு கூறுகிற்து.
இந்தநிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றது.
இந்த வழக்கில் கடந்த சில நாட்களாக தினமும் விசாரணை நடந்து வந்த நிலையில் இன்று, சர்வே தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.
அதாவது, இந்த ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருநாளில் மட்டும் சர்வே தூணில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த அனுமதி ஒருமுறை மட்டுமே பொருந்தும் என்றும், இதனைத் தொடர்ந்து வரும் ஆண்டுகளிலும் அந்த தூணில் தீபம் ஏற்றுவதற்கான நிரந்தர உரிமையாகக் கருதக்கூடாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.









